கல்லறையிலிடுதல் 57-0420 1. ஸ்தோத்தரிக்கப்பட்ட பரலோகப்பிதாவே, இங்கு ஏற்கனவே உள்ள பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தோடு நாங்கள் உம்முடைய பரிசுத்த வார்த்தையை அணுகுகிறோம். வார்த்தைகளைக் கூறமுடியாதபடி தடுக்க முயற்சிக்கிற ஒரு மோசமான குரல் வளத்தோடிருந்தாலும், என்னால் முடிந்தளவிற்கு மெதுவாகவும், நிதானமாகவும் பேசி, இன்றிரவு எங்கள் மத்தியில் உம்முடைய திவ்விய வழிநடத்துதலும், பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் அசைவாடும்படியாக நான் வேண்டிக்கொள்கிறேன். நாங்கள் தேவையுள்ளவர்களாயிருக்கின்ற காரணத்தால் சர்வவியாபியாயிருக்கிற அவரே தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை ஒவ்வொரு இருதயத்திற்கும் அளிப்பாராக. அவர் இன்றிரவு தேவனுடைய நல்ல காரியங்களின்பேரில் எங்களுக்குப் போஷிப்பாராக. 2 இன்றிரவு நாங்கள் வார்த்தையின் பேரில் பேசிக் கொண்டிருக்கையில், அநேக மைல்கள் தூரத்தில் உள்ள கல்வாரியண்டையிலே எங்களுடைய இருதயங்கள் இருப்பதாக. ஏதேன் தோட்டம் முதற்கொண்டு கேட்கப்பட்ட தேவனுடைய மகத்தான நியாயந்தீர்ப்புகளுக்கான எல்லாவற்றிற்கும் போதுமான கிரயத்தை இயேசுவானவர் இங்கு செலுத்தினாரே. நாங்கள் இன்றைக்கு அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம், அவருடைய மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமே இலவசமாக நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை தெளிவாக உணருவோமாக. 3 இன்றிரவு நாங்கள் உலகத்தாராயில்லாதிருக்கிறோம், ஏனென்றால் நாங்கள் தேவ குமாரனின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் கிரயத்தினால் கொள்ளப்பட்டிருக்கிறோம். நாங்கள் இன்றிரவு நன்றியுள்ள இருதயங்களோடும், முழு மனதோடும், முழு பலத்தோடும், எங்களுக்குள்ளாக இருக்கின்ற எல்லாவற்றோடும், ஒரு தூய்மையான, கலப்படமற்ற இருதயத்தோடு உம்மை சேவிக்க உம்மண்டை திரும்புவோமாக. 4 பிதாவே, இன்றிரவே இதை அருளும், உம்மை அறியாத எவரேனும் இங்கிருந்தால், அவர்கள் தங்களுடைய பாவ மன்னிப்பிற்காக சிலுவயண்டை தாழ்மையான, நீதிபரராகிய தேவனண்டை மன்னிப்படையும்படிக்கு வந்து, தங்களுடையப் பாவங்களை அங்கே அறிக்கையிடுவார்களாக. எங்கள் எல்லோருக்குமே இது ஒரு மகத்தான இரவாய் இருப்பதாக. நாங்கள் இதை உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 5 இப்பொழுது தேவனுடைய வார்த்தையை எடுத்து அதை போதுமான அளவிற்கு வெளிப்படுத்தக்கூடியவர் இப்பூமியில் எவருமே இல்லை என்பதை நாங்கள் தெளிவாக உணருகிறோம். ஏனென்றால் வார்த்தையானது ஆவியின் ஏவுதலால் எழுதப் பட்டிருக்கிறது. பரிசுத்த ஆவியானவரே வார்த்தையின் ஆக்கியோனாயிருக்கிறார். 6 பரலோகத்தில் அந்தப் புத்தகத்தைப் எடுத்து, அந்த முத்திரைகளை உடைப்பதற்காக ஒருவர் தேடப்பட்டபோது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் எவருமே அந்த முத்திரையை உடைக்கவும், அந்தப் புத்தகத்தைப் பார்க்கவும்கூட பாத்திரவானாக காணப்படவில்லை. ஆனால் உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் இருந்தார். அவர் வந்து சிங்காசனத்தின் மேல் இருந்தவருடைய கரத்தில் இருந்து புத்தகத்தை வாங்கி, அதின் முத்திரைகளை உடைத்து, அந்த வார்த்தையை திறந்தார். 7 இப்பொழுது நான் அப்போஸ்தலருடைய நடபடிகள் 2-ம் அதிகாரத்திலிருந்து வாசிக்கும்போது, அவரே வார்த்தையை எங்களுக்காக திறந்து கொடுப்பார் என்று நாங்கள் இன்றிரவு அவரில் நம்பிக்கை வைத்துக் கொண்டும், விசுவாசித்துக் கொண்டுமிருக்கிறோம். 8 நான் ஏற்கனவே அறிவித்ததுபோல, முதல் இரவு கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து பேசினேன். அது புதன்கிழமையாயிருந்தது. வியாழக்கிழமை இரவோ எல்லாவற்றிற்கும் போதுமான பலி என்பதன் பேரில் பேசினேன். வெள்ளிக்கிழமை இரவோ எல்லாவற்றிற்கும் போதுமான பாவநிவிர்த்தி; பரிபூரணம் என்பதின் பேரில் பேசினேன். நீங்கள் அதை கடந்த இரவு கேட்டீர்களா? பரிபூரணம், எப்படி நாம் தேவனுடைய பார்வையில் முற்றிலும் குற்றமற்றவர்களாயும், பரிபூரணமானவர்களாயும் இருக்க முடியும்? இன்றிரவோ கல்லறையிலிடுதல் என்பதன் பேரில் பேசுகிறேன். நாளையும் அதற்கு அடுத்து வரும் நாட்களிலும் உயிர்த்தெழுதலைக் குறித்து பேசவுள்ளேன். 9 இப்பொழுது நான் இன்றிரவு வேத வாசிப்பிற்காக அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் 2-ம் அதிகாரத்தில் 25வது, 26வது, 27 வது வசனங்கள் அடங்கிய பகுதியையே வாசிக்கத் தேர்ந்தெடுத்துள்ளேன். பேதுரு பேசுகிற இந்தப் பகுதியை வாசிக்கிறேன். அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்; 10 கல்லறையிலிருந்த அவரைக் குறித்த சூழ்நிலை அமைப்பைப் புரிந்து கொள்வதற்கான என்ன ஒரு அழகான வாசகமாய் இன்றிரவிற்கு இது அமைந்துள்ளது. 11 நாங்கள் முதல் காரியமாக உங்களுடைய கவனத்தைத் தேவனுடைய வார்த்தையின் பிழையற்ற தன்மைக்கு இழுக்கவே விரும்புகிறோம். தேவன் தம்முடைய வார்த்தையை, ஒவ்வொரு எழுத்தையும் காத்துக்கொள்கிறார். எனவே தேவன் தம்முடைய வார்த்தையக் காத்துக் கொள்கிறார் என்பதன் பேரில் நம்முடைய சிந்தனைகளை இன்றிரவு பதிய வைக்க நாங்கள் விரும்புகிறோம். அப்பொழுதே நாம் தேவன் தம்முடைய வார்த்தையில் கூறியிருக்கின்ற எந்தக் காரியமும் சத்தியமாயிருக்க வேண்டும் என்பதைக் குறித்து ஆதாரமாக உறுதிகூற முடியும். விசுவாசமானது நிலையற்ற மணலான கருத்துகளின் பேரில் அல்லது மனிதனுடைய வேத சாஸ்திரத்தின் பேரில் சார்ந்திராமல், அது அசைக்கமுடியாத கற்பாறையாகிய தேவனுடைய நித்திய வார்த்தையின் பேரிலேயே அதினுடைய முடிவான இளைப்பாறும் ஸ்தலத்தைக் கொண்டுள்ளது. 12 வார்த்தையாயிற்றே! தேவன் அதைக் கூறியிருக்கிறாரென்றால், அப்பொழுது அது என்றென்றைக்கும் சத்தியமாயிருக்கிறது. எனவே அவரால், “நான் அதை அந்தவிதமான பொருளில் கூறவில்லை” என்று கூறி, ஒருபோதும் அதைத் திரும்ப மாற்றிக் கொள்ள முடியாது. நான் சில காரியங்களைக் கூற முடியும். நீங்கள் சில காரியங்களைக் கூற முடியும். அதன் பின்னர் நாம் அதைத் திரும்பவும் சாதகமான மனப்பாங்கிற்கேற்றாற்போல் மாற்றிக் கொள்கிறோம். ஏனென்றால் நாம் அதை நம்முடைய மிகச் சிறந்த அறிவைக் கொண்டும், நம்முடைய மிகச் சிறந்த திறமையைக் கொண்டும் கூறினோம். ஆனால் தேவனோ நம்மிலிருந்து மிகவும் வித்தியாசமானவராயிருக்கிறார். அவர் முடிவற்றவராயிருக்கிறார். ஆகையால் ஒரு காரியம் முற்றிலும் பரிபூரணமாயிருந்தாலொழிய, அவர் அதைக் கூறுகிறதில்லை. அவர் என்ன கூறினாரோ அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவோ, அதற்காக ஒருபோதும் மன்னிப்பு கேட்கவோ மாட்டார். அது எப்பொழுதுமே சத்தியமாகவே நிலைநிற்கிறது. 13 தேவன் உலகத்தின் பாவங்களுக்காக தம்முடைய குமாரனை உலகத்தோற்றத்திற்கு முன்பே, ஒருவேளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் உண்மையாக மரிக்கச் செய்ததே நாம் இயேசுவானவருக்காக கொண்டாடும் இந்த மகத்தான நாட்களாகும். தேவன் வார்த்தையை உரைத்தார். தேவன் அதை உரைக்கிறபோது, அது பரலோகத்தில் ஒரு முடிவற்ற விளைபயனாய் உள்ளது. அது ஏற்கனவே முற்றுப் பெற்றுவிட்டது. ஓ, அது என்ன பொருட்படுத்துகிறது என்பதை மாத்திரம் பற்றிக் கொள்ளக்கூடுமானால், நாம் என்ன வித்தியாசமான ஜனங்களாயிருப்போம்!. கீழ்ப்படியாமைக்காக அவருடைய புத்தகத்தில் வைக்க்கப்பட்டுள்ள நியாயத்திர்ப்புகளைக் காணும் போது, அது ஒரு மனிதனை ஒவ்வொரு மணி நேரமும் தன்னையே பரிசோதித்துப் பார்க்கச் செய்யும். அதே சமயத்தில் தேவன் உண்மையுள்ளவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற ஆசீர்வாதங்களை வாசிக்கும்போது, அது நீதிமானை ஒவ்வொரு மணிநேரமும் களிகூரச்செய்யும். எனவே நாம் ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேற்றப்படும் என்று நாம் உறுதியாக சார்ந்திருக்க முடியும். நம்முடைய ஆத்துமாக்களை அதன்பேரில் அப்படியே நங்கூரமிடமுடியும். அது எப்பொழுதும் அந்தவிதமாகவே இருந்து வருகிறது. 14 தேவன் ஜலப்பிரளய உலக அழிவிற்கு முன்னர் நோவாவினிடத்தில் பேசினார். அது ஒருவேளை ஒரு வேதாகமம் எழுதப்படுவதற்கு இல்லை இந்த வேதாகமம் எழுதப்படுவதற்கு முன்பாக இருக்கலாம். தேவன் ஒரு ஜலப்பிரளயம் வரப்போகிறது என்றும், தண்ணீர் பூமியை மூடப்போகிறது என்றும் நோவாவிடம் கூறினார். ஆனால் அது சம்பவிப்பதற்கு ஒரு துளி ஆதாரமுமில்லாமல், எல்லாமே முரணாயிருந்தாலும், நோவாவோ பயமடைந்து, பேழையைக் கட்டி, அதற்கு ஆயத்தப்படுத்தினான். அது அவனையும், அவனுடைய குடும்பத்தாரையும் இரட்சிப்பதற்கானதாய் அமைந்திருந்தது. தேவனோ அவனை ஒருபோதும் அழிந்துபோக விடவில்லை. ஏனென்றால் அது அவருடைய வார்த்தையாயிருந்தது. அது சம்பவிக்கும் என்று தேவன் கூறியிருந்தபோது, அது சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. 15 யோபுவின் புத்தகம் வேதாகமத்தில் காணப்படும் மிகப் பழமையான புத்தகமாகும். ஒருவேளை அது ஆதியாகமம் எழுதப்படுவதற்கு முன்னரே எழுதப்பட்டு வேதாகமத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம். மோசே ஆதியாகமத்தை எழுதினான். யோபு தன்னுடைய புத்தகத்தில், தேவன் அவனுக்கு வாக்குப்பண்ணியிருந்த வாக்குத்தத்தத்தின்பேரில் பயபக்தியாய் சார்ந்திருந்தான். அவன் தன்னுடைய இருதயத்தில் எவ்வித பயமுமின்றி தன்னுடைய சர்வாங்க தகனபலியின் மூலம் உறுதியாய் நின்றான். தேவன் அதை கூறியிருந்தார் என்பதையும், தேவன் அதை நிறைவேற்ற வல்லவராயிருந்தார் என்பதையும் அறிந்திருந்தான். ஒவ்வொரு காரியமும் முரணாக செல்வது போன்று தென்பட்ட போதிலும் யோபு உறுதியாக நின்றான். ஏனென்றால் தேவனுடைய வாக்குத்தத்தம் உறுதியானதாயிருந்தது. தேவன் யோபுவிற்கு வாக்குப் பண்ணியிருந்தார். யோபு அந்த வாக்குத்தத்தத்தின் பேரில் சார்ந்திருந்தான். 16 ஓ, சபையானது சத்தியமாயிருக்கிற தேவனுடைய நித்தியமான வார்த்தையின் பேரில் பயபக்தியாய் சார்ந்திருக்கக் கூடிய ஸ்தானத்தை அடையுமானால் நலமுமாயிருக்குமே! புருஷரும், ஸ்திரீகளும் தேவனையும், அவர் கூறியிருப்பது சத்தியம் என்பதையும் உள்ளார்ந்த உண்மையான மதிப்புடன் ஏற்றுக்கொள்ளும்போது அங்கே என்ன ஒரு வித்தியாசம் காணப்படும். அங்கே என்ன ஒரு திருத்தம் காணப்படும், அவ்வாறு ஏற்றுக்கொள்ளும்போது, அங்கே என்ன ஒரு பிரிவினைக் காணப்படும். அங்கே என்ன ஒரு சந்தோஷம் காணப்படும், அங்கே என்ன ஒரு வல்லமை காணப்படும். சூழ்நிலை என்னவாக காணப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அதற்கு இதனோடு எவ்வித சம்பந்தமும் கிடையாது. தேவன் அவ்வண்ணமாகக் கூறினார். எனவே அதுவே இதனை தீர்த்து வைக்கிறது. 17 யோபு ஏறக்குறைய தன்னுடைய எல்லா சோதனையின் நேர அனுபவங்களிலும் இருந்தபோது, அவன் தேவனுடைய சமூகத்தில் ஓரு நீதியுள்ள மனிதனாகவே கண்டறியப்பட்டான். தேவனும்கூட அவன் உத்தமனாயிருந்தான் என்று கூறியிருந்தார். அவனைப் போல பூமியில் ஒருவனும் இல்லாதிருந்தனர். சாத்தான், “நான் அவனை உமது முகத்திற்கு எதிரே உம்மை தூஷிக்கும்படி செய்வேன்” என்று கூறினபடியால், அவனை சோதிக்கும்படியான தனியுரிமை சாத்தானுக்கு அளிக்கப்பட்டது. 18 அவன் ஏறக்குறைய யோபுவினுடைய ஜீவனையே எடுத்துக்கொள்ளப் பார்த்தான். அவன் அதை எடுத்துக் கொண்டிருந்திருப்பான். ஆனால் தேவன் ஒரு எல்லக் கோட்டை வரைந்து, “நீ அவனுக்கு எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அவனுடைய ஜீவனை எடுக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். 19 அதன் பின்னர் யோபு மிகவும் நெருக்கடியான சோதனையின் நேரத்தில் நின்றபோது, அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் தேவனைப் பார்ப்பேன்” என்றான். அது எவ்வளவு அந்தகாரமாக தென்பட்டது என்றும், அது எவ்வளவு உண்மையின்மையாய் தென்பட்டது என்பதைக் குறித்தும் கவலையேப்படாமல், தேவனுடைய நித்திய வாக்குத்தத்தத்தின் பேரில் யோபு தன்னுடைய ஆத்துமாவை நங்கூரமிட்டிருந்த ஒரு காரியமாகவே அது இருந்தது. ஓ, நாமும் அதை மாத்திரம் செய்யக்கூடுமானால் நலமாயிருக்குமே! கவனியுங்கள், அவன், “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று நான் அறிந்திருக்கிறேன்” என்று வாக்குத்தத்தத்தின் பேரில் சார்ந்திருந்தான். 20 நான் கூறவிரும்பும் வார்த்தைகளை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். யோபு தான் அடக்கம் பண்ணப்பட வேண்டிய ஸ்தலத்தைக் குறிப்பிட்டு கூறியிருந்தான். எனவே யோபு மரித்தபோது, அவன் கூறியிருந்தவிதமாகவே அடக்கம் பண்ணப்பட்டான். 21 ஆபிரகாம் என்னும் பெயர்கொண்ட மற்றொரு மனிதன் இருந்தான். அவன் தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக்கொண்டான். அவன் தேவனை விசுவாசித்தான். தேவன் அவனுக்கு வாக்களித்ததற்கு முரணாயிருந்த காரியங்களை, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைத்தான். அவன் தேவனை அவருடைய வார்த்தையின்படி ஏற்றுக் கொண்டான். நாட்கள் கடந்து சென்றபோதும், வாரங்கள் கடந்து சென்றபோதும், மாதங்கள் கடந்து சென்றபோதும், வருடங்களும்கூட கடந்து சென்றபோதும், அது ஆபிரகாமை சிறிதேனும் மாற்றமடையச் செய்யவேயில்லை. வேதம், “அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், விசுவாசமுள்ளவனாயிருந்து தேவனை மகிமைப்படுத்தினான்” என்று கூறியுள்ளது. 22 யாவுமே நாளுக்கு நாள் மெதுவாக கடினமாகிக் கொண்டே வந்தபோதிலும், யோபு ஒவ்வொரு நாளும் பலவீனமடைவதற்குப் பதிலாக பலமடைந்து கொண்டே வந்தான். ஓ, நாம் என்னே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட உறுதியைப் பெற்றுள்ளோம்! தேவன் வாக்குப்பண்ணியிருக்கிறதை அசாத்தியமாக்கக் கூடிய காரியம் எழும்புவதுபோன்று வித்தியாசமாய் காணப்பட்டாலும், நாம் பயமடைந்து உலகப்பிரகாரமானவற்றிற்கு திரும்பி விடாமல், நாம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதின்பேரில் எப்போதும் நின்றதைப் பார்க்கிலும் அதிக உறுதியாய் நிற்க வேண்டும். தேவன் ஏதோ ஒரு காரியத்தைக் கூறுகிறபோது, அதுவே இதனை தீர்த்து வைக்க வேண்டும். 23 ஆபிரகாம் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைத்தான். ஏனென்றால் அவைகள் வார்த்தைக்கு முரணாயிருந்தன. ஆபிரகாம் அநேக ஆண்டுகளாக ஒன்று சேர்ந்து வாழ்ந்த தன்னுடைய இனிய இருதயமாகிய மனைவி சாராளை இழந்துவிட்டபோது, அவன் யோபு அடக்கம் பண்ணப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு பகுதி நிலத்தை வாங்கி, அதில் சாராளை அடக்கம் பண்ணினான். ஏன் என்று வியக்கிறீர்களா? அவர்கள் தீர்க்கதசிகளாயிருந்தார்களே! அவர்கள் அதை கண்டிருந்தனரே! அவர்கள் தேவனோடு தொடர்பு கொண்டிருந்தார்களே! இப்பொழுது ஆபிரகாம் மரித்தபோதும் அவன் சாராளோடு அடக்கம் பண்ணப்பட்டான். 24 இப்பொழுது இந்த நபர்கள் அந்தப் பகுதி நிலத்தை அவனுக்கு இலவசமாக கொடுப்பதை அவன் விரும்பவில்லை. அவன் அதை சாட்சிகளுக்கு முன்பாக கிரயத்திற்கு வாங்கினான். அது ஞானஸ்நானத்திற்கு என்ன ஒரு அழகான மாதிரியாயிருக்கிறது. அவன் அதை சாட்சிகளுக்கு முன்பாக கிரயத்திற்கு வாங்கினான். எனவே அது அவனுடைய உடைமையாயிருந்தது. ஓ, அந்தவிதமாகத்தான் ஒரு உண்மையான விசுவாசியும் வரவேண்டும். ஏதோ ஒரு மூலையில் நழுவிச் செல்லாமல், அநேக சாட்சிகளுக்கு முன்பாக, “நான் கர்த்தராகிய இயேசுவிற்கும், பரிசுத்த ஆவிக்கும், அவருடைய மகத்தான கிரியைகளுக்கும் ஒரு சாட்சியாயிருக்கிறேன்” என்று நிற்க வேண்டும். நாம் இந்த தீங்கு நாள் அணுகுவதை காணும்போது இன்னும் எவ்வளவு உறுதியாக நிற்க வேண்டும். 25 அதன் பின்னர் ஆபிரகாமினுடைய குமாரன் ஈசாக்காக இருந்தான். அவனுக்கு வாக்குத்தத்தம் அளிக்கப்பட்டது. ஈசாக்கு மரித்தபோது, அவனும் ஆபிரகாமோடு அடக்கம் பண்ணப்பட்டான். ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான். 26 யாக்கோபு எகிப்தில் மரித்துப்போனான். ஆனால் கவனியுங்கள், அவன் மரிப்பதற்கு முன்னர், அவன் தன் குமாரனாகிய தீர்க்கதரிசியான யோசேப்பினிடத்தில், “குமாரனே இங்கு வா, உன் கையை என் தொடையின் கீழ் வை” என்றான். ஏனென்றால் அவன் எப்படி நொண்டியாக்கப்பட்டான் என்றால், கர்த்தருடைய தூதன் அவனுடைய தொடைச் சந்தை தொட்ட காரணத்தினால் அவன் நொண்டியாக்கப்பட்டான் என்பது நினைவிருக்கும். எனவே அந்நாள் முதற்கொண்டு அவன் நொண்டி, நொண்டி நடந்தான். அவன், “உன் கையை என் தொடையின் கீழ்வைத்து, நீ இங்கே எகிப்திலே என்னை அடக்கம் பண்ணமாட்டாய் என்று நம்முடைய பிதாக்களின் தேவன்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான். ஏன்? ஓ, அவர்கள் வார்த்தையை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் வெளிப்பாட்டை உடையவர்களாயிருந்தனரே! 27 தெய்வீக வெளிப்பாட்டின் மேல் கட்டப்பட்டிருக்கிற ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு அதை கூறும்படியாக நான் இங்கே சற்று நிறுத்துவேனாக. அது ஸ்தாபனத்தின் மேலல்ல, ஸ்தாபன அமைப்பின் பேரிலல்ல, பிரமாணங்களின் பேரிலல்ல அல்லது கோட்பாடுகளின் மேலல்ல. ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள ஜீவனுள்ள தேவனுடைய சத்தியத்தின் பேரில் கட்டப்பட்டுள்ளது. 28 ஏதேன் தோட்டத்தில் ஆபேல் இருந்தபோது முதல் சபையானது துவங்கினது. அவன் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர வேண்டும் என்பதை எப்படி அறிந்து கொண்டான்? ஏன் அவன் காயீன் செய்ததுபோல பழங்களைக் கொண்டுவரவில்லை? ஆனால் அவனுக்கு அது வெளிப்படுத்தப்பட்டிருந்ததே! 29 இயேசு ஒருமுறை பேசுகையில், “மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “சிலர் உம்மை மோசே என்றும், எலியா என்றும் சொல்லுகிறார்கள்” என்றனர். அப்பொழுது அவர், “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்” என்று கேட்டார். 30 நீங்கள் பாருங்கள், அது யாரோ ஒருவர் என்ன நினைக்கிறார் என்பதன்பேரில் சார்ந்திராமல், அது சத்தியமாயிருப்பதை நீங்கள் என்னவென்று அறிந்துள்ளீர்கள் என்பதாய் உள்ளது. எனவே, “நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” “நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்ற அந்தக் கேள்வி நம் ஒவ்வொருவரையும் இன்றிரவில் முகமுகமாய் சந்திக்க வேண்டியதாயுள்ளது. 31 பேதுருவோ, பிரதியுத்தரமாக, எவ்வித ஒரு தயக்கமுமின்றி, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான். 32 இயேசு எல்லோருடைய இருதயங்களின் இரகசியங்களையும் அறிந்திருந்திருந்தபடியால், அவர் வேறு யாருமின்றி, மாம்சத்தில் வெளிப்பட்ட யெகோவாவாயிருந்தபடியால், அவர், “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்றார். 33 ஜனங்களாகிய நாம் அதைப் பெற வரும்போது, லூத்தரன்களாகிய நாங்கள் விசுவாசத்தினால் நடக்க விரும்புகிறோம். மெத்தோடிஸ்டுகளாகிய நாங்கள் அதை பெற்றுக்கொள்ள சத்தமிட விரும்புகிறோம். பெந்தெகோஸ்துக்களாகிய நீங்கள் அதை பெற்றுக்கொள்ள அந்நிய பாஷைகளினால் பேச விரும்புகிறீர்கள். ஆனால் அதுவோ அதிலிருந்து கோடிக்கணக்கான மைல் தூரங்கொண்ட வித்தியாசமாய் உள்ளது. 34 அது, “இந்த கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே தனிப்பட்ட முறையில் தம்மைக் குறித்து இருதயத்தில் வெளிப்படுத்துகிற ஒரு தெய்வீக வெளிப்பாடாயிருக்கிறது. அது மத்தேயுவில் பரிபூரணமாக கிரியை செய்கிறது…; 24, 5:24 இல்லை யோவான் 5:24-ல் “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிக்கிறான்” என்று கூறப்பட்டுள்ளது. நீங்கள் கொண்டிருந்த வேறெந்த செயல்பாட்டின் காரணமாயுமல்ல, எந்த உணர்ச்சி வசப்படுதலினாலும் அல்ல, “இந்த கல்லின் மேல் என் சபையை கட்டுவேன்” என்று கிறிஸ்துவானவரே பரலோகத்திலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்தினதை பெற்றுக்கொண்ட சிலாக்கியமுடையவர்களாய் நீங்கள் இருந்து வருகிற காரணத்தினாலேயாகும். 35 யாக்கோபு, அவன் மரித்தபோது, அவனுடைய குமாரனால் அவனுடைய சரீரம் கொண்டு செல்லப்பட்டு, புனித தேசத்தில், பாலஸ்தீனாவில் ஆபிரகாம், ஈசாக்கு, சாராள் மற்றும் யோபுவோடு அவன் அடக்கம் பண்ணட்டான். 36 அப்பொழுது யோசேப்பு ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் எகிப்தில் செழிப்புற்றிருந்தான். அவன் தேவனை அறிந்திருந்தான். தேவன் தம்மை அவனுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அவன் மரிக்கும்போது, “நீங்கள் என்னுடைய எலும்புகளை இங்கே அடக்கம் பண்ண வேண்டாம், ஆனால்…என்றோ ஒருநாள் தேவன் உங்களை நிச்சயமாக சந்திப்பார்” என்றான். ஏன்? அவன், “அவர்கள் நானூறு வருடங்கள் இந்த தேசத்தில் சேவிப்பார்கள். ஆனாலும் நான் அவர்களை வெளியே கொண்டு வருவேன்” என்று மோசேயினிடத்தில் கூறப்பட்ட தேவனுடைய வார்த்தையின் பேரில் பயபக்தியாய் சார்ந்திருந்தான். அவன் வார்த்தையின் பேரில் பயபக்தியாய் சார்ந்திருந்தான். 37 நீங்கள் கவனிப்பீர்களேயானால், இது இங்கு என்ன ஒரு அழகான எடுத்துக்காட்டாயுள்ளது. ஒவ்வொரு எபிரெயனும் ஆளோட்டிகளின் வாரினால் தங்களுடைய முதுகில் பெற்ற வீங்கின காயத்தோடு கடந்து செல்லும்போது, அவன் தன்னுடைய தீர்க்கதரிசியாகிய யோசேப்பின் எலும்புகளை நோக்கிப் பார்த்து, என்றோ ஒருநாள் அவர்கள் அங்கிருந்து செல்லப் போவதாயிருந்ததை அவன் அறிந்து கொண்டான். ஏனென்றால் என்றோ ஒருநாள் அவர்கள் வெளியே செல்லப் போவதற்கு ஒரு ஞாபகச் சின்னமாகவே அங்கே அந்த எலும்புகள் விடப்பட்டிருந்தன. 38 சுமார் பதினைந்து அல்லது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பில்லிபால், சுமார் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோது, நாங்கள் ஒரு சிறு மலரை எடுத்துக் கொண்டு, அவனுடைய தாயாரின் கல்லறைக்கு ஒருநாள் அதிகாலை ஈஸ்டர் தினத்தன்று சென்றிருந்தோம். அப்பொழுது சூரியனோ தன்னுடைய முதல் கதிரொளியோடு உதயமாகிக் கொண்டு இருந்தது. அதாவது அது காலைப்பொழுதிற்கு சற்று முன்னதாயிருந்தது. அப்பொழுது ஆராதனைக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது நாங்கள் அவனுடைய குட்டித் தங்கையும், அவனுடைய தாயாரும் அடக்கம் பண்ணப்பட்டிருந்த கல்லறையண்டைக்கு நடந்து சென்றபோது, இந்தச் சிறுவன் தன்னுடைய தொப்பியை கழற்றிக் கொண்டான். பின்னர் அவன் வாயை மூடிக்கொண்டு அழத்தொடங்கி, “அப்பா, அம்மா இங்கே கீழே உள்ள கல்லறைக் குழியிலா இருக்கிறார்கள்?” என்று கேட்டான். 39 அதற்கு நானோ, “இல்லை மகனே, அவள் அங்கே கீழே உள்ள அந்தக் கல்லறையில் இல்லை, அவள் உன்னையும் என்னையும் காட்டிலும் கோடிக்கணக்கான மடங்கினைக் கொண்ட ஒரு மேலான நிலையில் இருக்கிறாள்” என்றேன். அப்பொழுது அவனோ, “நான் மீண்டும் அம்மாவைக் காண்பேனோ?” என்று கேட்டான். 40 அதற்கு நான், “தேவனுடைய கிருபையினால் நீ அதனை வாஞ்சிப்பாயானால், உன்னால் அவளை மீண்டும் காணமுடியும்” என்றேன். அப்பொழுது அவன், “அவளுடைய சரீரம் இந்தக் கல்லறையிலிருந்து மேலே எழும்பிவருமா?” என்று கேட்டான். 41 அதற்கு நான், “தேனே உன்னுடைய கண்களை மூடிக் கொள். நான் உனக்கு ஒரு சிறு கதையை கூறவுள்ளேன். அநேக ஆண்டுகளுக்கு முன்னர், இக்காலையில் ஒரு கல்லறை வெறுமையாக விடப்பட்டிருந்தது” என்றேன். மேலும் நான், “அது ஒரு நினைவுச் சின்னமாயுள்ளது” என்றும், “தேவனுக்குள் நித்திரையடைந்தவர்களையும் கிறிஸ்து வரும்போது அவரோடுகூட கொண்டு வருவார்” என்றும் கூறினேன். நான் எவ்வித சந்தேகத்தின் நிழலுக்கும் இடமின்றி தேவனுடைய நித்திய வாக்குத்தத்தத்தின் பேரில் பயபக்தியோடு சார்ந்துள்ளேன். 42 பண்டைய யோபுவைப் போல, நாம், “சாம்பலுக்கு சாம்பல், மண்ணுக்கு மண்” என்று கூறுவதை கேட்கும்போது, அது நமக்கு லாங்பெஃலோ என்பவர் கூறினதையே நினைப்பூட்டுகிறது: வாழ்க்கை ஒரு வெற்றுக் கனவுதான் என, துயரமிகு பாக்களில், என்னிடம் கூறாதே! ஏனெனில் உறங்கும் ஆத்துமா மரித்திருக்கிறது, காரியங்கள் தென்படுபவை போல அவை இருப்பதில்லை. மேலும் அவர்: ஆம், உண்மையானது வாழ்க்கை! உள்ளார்ந்தது வாழ்க்கை! கல்லறை அதனுடைய குறிக்கோள் அல்ல; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய், என்றுரைக்கப்பட்டது ஆத்துமாவைக் குறித்தல்ல என்றுரைத்தார். 43 அவர்கள் அதை ஒரு ஆவிக்குரிய சரீரம் (theophany) என்றழைக்கின்றனர். அதாவது நாம் இங்கிருந்து பிரிந்து செல்லும்போது நாம் வேறெங்கோ ஓர் இடத்திற்குள்ளாகச் செல்கிறோம். அது என்னவாயிருந்தாலும், நான் அப்போஸ்தலனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்கிறேன். அவன், “பூமிக்குரிய இந்தக் கூடாரம் அல்லது வாசஸ்தலம் அழிந்துபோனாலும், நாம் இதிலிருந்து குடிபெயர்ந்து அதற்குள்ளாகச் செல்லும்படியாக ஏற்கனவே ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது” என்று கூறியுள்ளான். 44 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு மற்றும் எல்லா தீர்க்கதரிசிகளுமே ஒரு உயிர்த்தெழுதல் வரப்போகிறது என்றும், மீட்பர் வரப்போகிறார் என்றும் நம்பிக்கை கொண்டு விசுவாசித்தனர். அவர்கள் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருந்தனர். ஏனோக்கு அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்திருந்தான். பயபக்தியோடு சார்ந்திருந்து, தன்னுடைய சாட்சியை அதனோடு முத்தரித்தான். ஈசாக்கு, யாக்கோபு, தானியேல், எரேமியா, எசேக்கியல் முதலானோர் மேசியா வருவார் என்ற அந்த நேரத்தினை நோக்கியவாறு பயபக்தியாய் சார்ந்திருந்தனர். 45 அவர்கள் மரித்தபோது அவர்களுடைய ஆத்துமாக்கள் பரதீசுக்குள்ளாகச் சென்றன. அவர்கள் தேவனுடையச் சமூகத்திற்குள் செல்ல முடியவில்லை. ஏனென்றால் (நாம் அதை கடந்த இரவு பார்த்தோம்) காளை, வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தமானது அவர்களுடையப் பாவங்களை மன்னிக்கமுடியாததாயிருந்தது. அது பாவங்களை மாத்திரம் மூடி, பரிபூரண பலியானது வரப்போகும் ஒரு நாளைக் குறித்தேப் பேசினது, மிருகத்தில் உள்ள இரத்தமானது ஆராதனைச் செய்கிறவன் மேல் திரும்ப வரமுடியாததாயிருந்த காரணத்தால் அப்பொழுது அவன் அந்தவிதமானப் பலிகளை செலுத்துவது நிறுத்தப்பட முடியாததாயிருந்தது. 46 ஆனால் தேவகுமாரன் மரித்தபோது, அவர் வேறு யாருமின்றி தேவனாயிருந்த அவருக்குள் இருந்த ஜீவன் திரும்பி வந்து, தேவனுடைய குடும்பத்திற்குள்ளாக நம்மை சுவீகார புத்திரராக்கிக் கொண்டது. எனவே இப்பொழுது நாம் அவருடைய இரத்தத்திலிருந்து வந்த ஜீவனால் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம். 47 இப்பொழுது நாம் தொடர்ந்து பேசிக்கொண்டே செல்கையில் துரிதமாக கவனியுங்கள். முன்னர் பழைய ஏற்பாட்டில் விசுவாசமாயிருந்து ஆராதித்து, விசுவாசத்தில் மரித்து, அந்த நேரத்திற்காகக் காத்திருந்தனர். அந்த தீர்க்கதரிசிகள் அதை செய்ததற்கும், பாலஸ்தீனாவில் தங்களை அடக்கம் பண்ண வேண்டுமென்றும் கூறினதற்கு காரணமென்னவெனில், உயிர்த்தெழுதல் எகிப்தில் சம்பவிக்கப்போவதில்லையென்றும், அது பாலஸ்தீனாவில் மாத்திரமே சம்பவிக்கப்போகிறது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். 48 அதைத்தான் நானும் இன்றிரவு கூறுகிறேன். நான் எல்லா விதமான பெயர்களையும் பெற்றுக்கொண்டேன். ஜனங்கள் என்னை என்னவென்று அழைக்கிறார்கள் என்று நான் கவலைப்படுகிறதில்லை. அது எனக்கு எந்த ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் இதை அறிந்து கொள்வதேயாகும்; அதாவது நான் மரித்திருக்கிறேன், என்னுடைய ஜீவன் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டு, தேவனின் மூலமாக கிறிஸ்துவுக்குள் மறைக்கப்பட்டுள்ளது. எனவே அப்பொழுது அவர் என்னை மரித்தோர் மத்தியிலிருந்து கூப்பிடும்போது, நான் அந்நாளில் மறுஉத்தரவு அருளுவேன். கிறிஸ்துவுக்குள் என்னை அடக்கம் பண்ணுங்கள். ஏனென்றால் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தேவன் அந்நாளில் அவரோடு கொண்டு வருவார். 49 நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிறோம்? 1கொரிந்தியர் 12:13, “எல்லோரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, தேவனுடைய இராஜ்ஜியத்தின் பிரஜைகளாகிறோம்” என்று உரைக்கிறது. நாம் பூமியின் மேல் அந்நியர்களும், பரதேசிகளுமாயிருக்கிறோம் என்று அறிக்கையிட்டு, உலகப்பிரகாரமான காரியங்களைத் தேடாமல், அவர் தம்முடைய மகிமையில் வரும்போது, எல்லையற்ற சமுத்திரத்தை ஆளுகை செய்ய வரும் அந்த ஸ்தோத்திரிக்கப்பட்ட இராஜாவின் வருகைக்காகவே எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நிச்சயமாகவே நாம் அவருடைய வருகைக்காகவே எதிர்நோக்கியிருக்கிறோம். 50 ஆகையால் என்னுடைய சிந்தையில் யாதொரு சந்தேகமும் இல்லை. அதைத்தான் இயேசுவானவரும் இங்கே பூமியின் மேலிருந்தபோது தம்முடைய சிந்தையில் கொண்டிருந்தார். அது தேவனுடைய பிழையற்ற நித்திய வார்த்தையாயிருந்தது. ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது என்பதை நாம் அறிந்தோம். முழு தேவத்துவமும் அவருக்குள் இருந்தது. அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாய் ஒரு மானிட ரூபத்திற்குள் வாசம் பண்ணினார். தேவனுடைய ஆவிக்குரிய சரீரம், அவர் தேவனுடைய மகத்தான சாயலில் மனிதனை உண்டாக்கி, அதன் பின்னர் அவனை பூமியில் வைத்தார். அவருக்கு ஒரு சரீரம் இருந்தது. தேவன் ஒரு சரீரமில்லாதவராயிருக்கவில்லை. தேவன் ஒரு சரீரத்தை உடையவராயிருக்கிறார். அது ஒரு மனிதனைப் போன்றே காணப்படுகிறது. மோசே அதனைக் கண்டான், மற்றவர்களும் அதனைக் கண்டனர். அது ஒரு மனிதனைப் போன்றே காணப்படுகிறது. 51 அது இதைக் குறித்து, அது என்னவாயிருக்கிறது என்பதைக் குறித்ததுமான ஒரு மறுபதிப்பாயிருக்கிறது. (Impression) பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு காரியமும், அழகும், இனிமையும், பூமியின் அழகும், நாம் இவ்வுலகத்தை விட்டுச் செல்லும்போது, இதைப் பார்க்கிலும் மேம்பட்ட நிலையில் நமக்கு காத்திருக்கிறவைகளுக்கு மாதிரிகளாகவே இவ்வுலகில் உள்ளதேயன்றி வேறொன்றிற்கும் இல்லை. ஏனென்றால் பூமியில் உள்ள ஒவ்வொரு காரியமும் அப்படியே பரலோகத்தில் உள்ளவைகளுக்கு மாதிரியாகவே அமைந்துள்ளன. நன்மையான ஒவ்வொரு காரியமும், நீதியான ஒவ்வொரு காரியமும், அழகான ஒவ்வொரு காரியமும், மரங்களும், பறவைகளும் ஒவ்வொரு காரியமும் அப்படியே பரலோகத்தில் இருக்கிறவைகளுக்கு மாதிரியாகவே உள்ளன. 52 நம்முடைய சொந்த ஜீவியமும் ஒரு மாதிரியாக உள்ளது. அது வெறுமனே ஒரு நிழலாய் உள்ளதேயன்றி உண்மையான காரியமாய் இல்லை. அது நிழற்பட வடிவில் உள்ளது. அது புகைப்பட வடிவில் தோன்றுவதற்கு மரணத்தை எடுத்துக்கொண்டு, நாம் தோன்றின ஆவிக்குரிய சரீரத்திற்குள்ளாகவே நம்மை மீண்டும் பொருத்துகிறது. அதன் பின்னர் நாம் அவருக்கொப்பான ஒரு உயிர்த்தெழுந்த சரீரத்தில் வருகிறோம். என்னே ஒரு அழகு! அழகாய் மட்டுமின்றி அது உண்மையானதாயும், நாம் அவரைப் போன்றிருப்போம் என்ற பயபக்திக்குரிய தேவனுடைய நித்திய வார்த்தையின் சத்தியமுமாயிருக்கிறது. 53 இப்பொழுது கவனியுங்கள். இயேசு எல்லா தேவனுடைய வல்லமைகளையும், தனக்குள் உடையவராயிருந்தார். ஆனால் அவர் சாத்தானை சந்தித்தபோது, அவர் தன்னுடைய வல்லமைகளில் எதையுமே ஒருபோதும் உபயோகிக்கவே இல்லை. அவர் வார்த்தையை மாத்திரம் சுட்டிக்காட்டினாரே! அவர் அதைத்தான் செய்தார். அவர், “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்று கூறினார். 54 அப்படியானால் நீங்கள் சபையில் இருப்பது போன்ற ஒரு நல்ல கிறிஸ்தவனாயிருக்க நீங்கள் வீட்டில் தரித்திருக்கலாம் என்று எப்படி உங்களால் கூறமுடியும்? உங்களால் அதை செய்யமுடியாது. வார்த்தையை வாசியுங்கள். பரிசுத்த ஆவியானவரே வார்த்தையை போஷிக்கிறார். வேதமானது அவருடைய சபைக்கான ஆவிக்குரிய ஆகாரமாக உள்ளது. பரிசுத்த ஆவியானவரே அதை உங்களண்டைக்கு கொண்டு வந்து, அதை இருதயத்தில் வைத்து, அதற்கு நன்றி செலுத்தும் தண்ணீரினால் நீர்ப்பாய்ச்சுகிறார், ஒவ்வொரு தெய்வீக வாக்குத்தத்தமும் சரியாக தேவன் அது என்ன செய்யும் என்றும் கூறினாரோ, அதனை உண்டுபண்ணும். அது உண்டுபண்ணப்படத்தான் வேண்டும். அது அவருடைய வார்த்தையாயிருக்கிறது. அது ஜீவனாயிருக்கிறது. 55 இப்பொழுது எனக்கு இன்னும் அரை மணி நேரம் மட்டுமே இருந்தது என்பதையே நான் மறந்து போய்விட்டேன். எனவே நான் கூறவேண்டுமென்றிருப்பதைக் கூறுவதற்கு அதிக நேரம் ஆகிவிடுகிறது. 56 ஆனால் இயேசுவானவருடைய ஜீவியத்தின் கடைசி மணிவேளையில், இல்லை இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் அவருடைய ஜீவியத்தைக் குறித்த அநேக, அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதைக் கவனியுங்கள். 57 யாரோ ஒருவர் என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம், இது சம்பவிக்க வேண்டும், அது சம்பவிக்க வேண்டும்” என்று கூறினார். அதற்கு நான், “அது ஒரு மணி நேரத்தில் நிகழக்கூடும்” என்றேன். 58 நீங்கள் 22-ம் சங்கீதத்தை வாசிப்பீர்களேயானால், சிலுவையில் அவருடைய மரண வேளையை கவனித்துப் பார்ப்பீர்களேயானால், அவருடைய ஜீவியத்தின் கடைசி இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் எத்தனை நிறைவேற்றப்படாத தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதை நான் இப்பொழுது சற்று மறந்து விட்டேன். நிச்சயமாக, தாவீது அதைக் குறித்து கதறினபோது, “அவர்கள் என் கைகளையும், என் கால்களையும் உருவக் குத்தினார்கள். என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பனவற்றை கூறினான். 59 அதன் பின்னர் நீங்கள் சத்தியத்தை, பிழையற்ற தேவனுடைய வார்த்தையின் பாகத்தை, மற்றொரு காரியத்தை கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வேதம், “அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று உரைத்துள்ளது. ஏனென்றால் அது பஸ்கா ஆட்டுக்குட்டிக்கு ஒரு மாதிரியாயிருந்தது. அந்த ஆட்டுக்குட்டி எவ்வித பழுதுமற்றதாயிருக்க வேண்டும். அந்த ஆட்டுக்குட்டியின் எலும்புகள் ஒன்றும் முறிக்கப்படக்கூடாது. அவர் மரித்தபோது அந்த நேரத்தில்…அவர்கள் ஒரு சுத்தியலைக் கொண்டு அவருடைய கால் எலும்புகளை முறிக்கச் சென்றனர். ஆனால் அதற்கு சற்று முன்னர்தான்…அந்த மிக நெருக்கடியான நேரத்தை நோக்கிப் பாருங்கள். அந்த மனிதன் சுத்தியலோடு அவருடைய கால் எலும்புகளை முறிக்க ஆயத்தமாயிருந்தான். ஆனால் தேவனுடைய வார்த்தையோ, “அவருடைய சரீரத்தில் உள்ள எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று உரைத்திருந்தது. “அது எப்படி சம்பவிக்கப் போகின்றது?” நாம் துரிதமாக முடிக்க வேண்டியதாயிருக்கிறது. 60 தேவனுடைய வார்த்தை நித்தியமானதாயிருக்கிறதே! தேவனுடைய வார்த்தை பரிபூரணமாயிருக்குமானால், ஒரு உயிர்த்தெழுதல் உண்டு என்பதை எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாய் கிறிஸ்தவுக்குள் இருப்பவர்கள் எழும்பி வருவர். தேவன் தம்முடைய வார்த்தைக்கு கடமைப்படவராய், அவர் உங்களை இரட்சிப்பது போன்றே, உங்களை சுகப்படுத்த வேண்டியவராயுமிருக்கிறார். ஏனென்றால் அது அவராயும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையாயுமிருக்கிறது. அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. அதிலிருந்து எதையுமே எடுத்துப்போட நமக்கு உரிமையே கிடையாது. ஆனால், “அது சத்தியமாயிருக்கிறது” என்று கூற வேண்டும். அதை விசுவாசியுங்கள். என்ன சம்பவித்தாலும் கவலைப்படாமல் அதை எப்படியாவது விசுவாசியுங்கள். அந்தவிதமாகவேத்தான் மற்றவர்களும் அதை விசுவாசிக்க வேண்டியதாயிருந்தது. எனவே நாம் அதிலிருந்து விலக்கப்பட்டிருக்கவில்லை. தேவன் இஸ்ரவேலருக்கு பாலஸ்தீனாவைக் கொடுத்தார். ஆனால் அவர்கள் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் அவர்கள் போரிட வேண்டியதாயிருந்தது. வாக்குத்தத்தம் உங்களுடையதாயிருக்கிறது. ஆனால் நீங்கள் உரிமை கோரும் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் நீங்கள் போரிட வேண்டியதாயிருக்கிறது. பிசாசு அதற்கு போரிடுவான், நிச்சயமாகவே அவன் போரிடுவான். 61 ஆனால் கவனியுங்கள், அவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கால் எலும்புகளை முறிக்க ஆயத்தமாயிருந்த போது, அந்தச் சுத்தியல் அந்தக் கால் எலும்பை அடித்து முறித்திருக்குமானால், அப்பொழுது தேவன் பொய்யானவராக கண்டறியப்பட்டிருந்திருப்பார். ஆனால் அந்த விலையேறப்பெற்ற சரீரத்தில் அந்தச் சுத்தியலை அடிக்க வேதனைக்குரிய இருள் சூழ்ந்த முழு அந்தகாரத்திலும் உள்ள பிசாசுகள் அனைத்தாலுமே முடியாமற்போயிற்றே! ஏனென்றால் அதற்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே தாவீது, “அவருடைய சரீரத்தில் உள்ள எலும்புகள் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று கூறியிருந்தார். தேவனுடைய வார்த்தை சத்தியமுள்ளதாய் நிற்க வேண்டியதாயிருந்தது. 62 ஆனால் அப்பொழுது அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஒரு ஈட்டியை எடுத்து, அவருடைய விலாவில் உருவக் குத்தினபோது, “அவர்கள் என் கைகளையும், என் விலாவையும் உருவக் குத்தினார்கள்” என்று வேதம் கூறியிருந்தது நிறைவேறும்படியாக, இரத்தமும், தண்ணீரும் புறப்பட்டு வந்தன. வார்த்தை நிறைவேற்றப்பட்டது. 63 இப்பொழுது அவர் மரித்துக் கொண்டிருந்தபோது, ஓ, அது என்னே ஒரு திகிலுண்டாக்குகிற வேளையாயிருந்தது! நான் அந்தப் பாடலைக் குறித்து நினைத்துப் பார்க்கிறேன். அநேக ஆண்டுகளுக்கு முன்னர் புலவன் எழுதின அந்தப் பாடலை நான் நினைக்கும்போது, உண்மையாகவே அது எனக்கு நடுக்கம் தருகிற உணர்வையே உண்டாக்குகிறது. பிளவுண்ட கற்பாறைகளுக்கும், இருள் சூழ்ந்த வானங்களுக்கும் மத்தியில், என் இரட்சகர் தன்னுடைய தலையைச் சாய்த்து மரித்தார்; கிழிந்த திரையானது பரலோகத்தின் சந்தோஷத்திற்கும், முடிவற்ற நாளுக்கும் வழியை வெளிப்படுத்தினது. 64 அவர் அங்கே இரத்தம் வடிய மரித்துக் கொண்டும், தொங்கிக் கொண்டுமிருக்கையில், அவர் தம்முடைய தலையை சாய்த்து மரித்தபோது, தேவன் தம்முடைய சாயலின்படி உண்டாக்கின மானிட சிருஷ்டிகளை மீட்க அதைப் போன்ற அப்பேர்ப்பட்ட ஒரு கிரயத்தை செலுத்த வேண்டியதாயிருக்கிறதே என்று சூரியன் எண்ணி, அவர்கள் மேல் பிரகாசியாதபடி தனக்குத்தானே மிகவும் வெட்கமடைந்து கொண்டது. சூரியன் அந்த வேளையில் பூமியின் மேல் பிரகாசிக்க மறுத்துவிட்டது. சந்திரனும் தன்னுடைய ஸ்தானத்திலிருந்து பின்னிட்டுத் திரும்புமளவிற்கு அவ்வளவு தடுமாற்றமடைந்தது. நட்சத்திரங்களும் பூமிக்கு தங்களுடைய ஒளியைக் கொடுப்பதற்கு மறுத்து விட்டன. பாவம் என்ன ஒரு பயங்கரமான காரியமாயிருக்க வேண்டும். எப்படியாய் தேவன் அதனோடு ஈடுபட வேண்டியதாயிருந்தது. 65 அந்தப் பரியாசக்கார ஆசாரியர்கள் துப்பின எச்சில்கள் அவருடைய முகத்தில் வழிந்து கொண்டிருந்தது. ஒரு மனிதன் ஒரு கோலினால் அவருடைய தலையின் மேல் அடித்து, “நீர் ஒரு தீர்க்கதரியானால், உம்மை அடித்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்” என்றான். அவர்களில் ஒருவன் அவருடைய முகத்திலிருந்த தாடியைப் பிடுங்கி, அவருடைய முகத்தில் அறைந்தபோது, அவரே நம்முடைய பாடுகளை அவர்மேல் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விரும்பினார். 66 அவர், “என் இராஜ்ஜியம் இவ்வுலகத்திற்குரியதாயிருந்திருந்தால், நான் என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமாக தூதரை என்னிடத்திற்கு அனுப்புவாரே” என்றார். 67 அதை மாற்றியிருந்திருக்க முடியும். ஆனால் எப்படி அவரால் அதைச் செய்திருக்க முடியும்? அவரால் அதைச் செய்ய முடியவில்லையே, ஏனென்றால் அது தன்னுடைய சொந்தப் பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டுக் கொண்டிருந்ததாயிருந்தது. ஒரு தந்தையினுடைய, ஒரு தகப்பனுடைய, தங்களுடைய சொந்த தகப்பனுடைய இரத்தத்திற்காக தன்னுடைய சொந்த பிள்ளைகளே (அந்தகாரத்தில்) கூக்குரலிட்டுக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அந்தக் காரணத்தினால்தான் அவரால் மரிப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாதிருந்தது. அவர் மரித்திருக்காவிடில் அது அவருடைய பிள்ளைகளுக்கான ஆக்கினைத்தீர்ப்பாயிருந்திருக்கும். அது சிருஷ்டிகளுக்கான ஆக்கினைத் தீர்ப்பாயிருந்திருக்கும். ஆனால் தம்முடைய ஜனங்களை இரட்சிக்க அவர் மரிக்க வேண்டியதாயிருந்தது. 68 அவர் மரித்தபோது, அவர் தம்முடைய தலையை சாய்த்தபோது, இந்தப் பூமியானது நிலைபெயர்ந்து போகுமளவிற்கு நடுக்கமடைந்திருந்தது. அது நடுக்கமுற்று ஆட்டங்கண்டிருக்க வேண்டும். ஏனென்றால் வேதம், “ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று” என்று கூறியுள்ளது. பூமி அசைந்து, கன்மலைகளும் பிளந்தன. தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ்வரைக்கும் கிழிந்தது; பலிபீடங்கள் நிலை மாறின. ஜீவனுள்ள தேவகுமாரன் மரித்தார். சூரியன் அதை அடையாளங்கண்டுகொள்ளுமளவிற்கு அவர் அப்படிப்பட்ட மரண மெய்தினார். சந்திரன் அதை அடையாளங்கண்டு கொள்ளுமளவிற்கு அவர் அப்படிப்பட்ட மரணம் எய்தினார்.நட்சத்திரங்கள் அதை அடையாளங்கண்டுகொள்ளுமளவிற்கு, அவர் அப்படிப்பட்ட மரணமெய்தினார். பூமி அதை அடையாளங்கண்டு கொள்ளுமளவிற்கு அவர் அப்படிப்பட்ட மரணமெய்தினார். மூலக்கூறுகள் அதை அடையாளங்கண்டுகொள்ளுமளவிற்கு, வளிமண்டலங்கள் அதை அடையாளங்கண்டு கொள்ளுமளவிற்கு அவர் அப்படிப்பட்ட மரணமெய்தினார். அது தேவனுடைய குமாரன் என்பதை ஒவ்வொரு காரியமும் அடையாளங்கண்டு கொள்ள வேண்டியதாயிருந்ததே! ஏனென்றால் தேவனுடைய வார்த்தை தவறிப்போக முடியவில்லை. “அந்த வித்து சர்ப்பத்தினுடைய தலையை நசுக்கும்” என்று ஏதேன் தோட்டம் முதற்கொண்டே அவர் வாக்களிக்கப் பட்டிருந்தார். 69 இப்பொழுது அவருக்கு என்ன சம்பவித்தது? அவர் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புவின் கல்லறையில் வைக்கப்பட்டபோது, அவர் எங்கே சென்றார்? 70 அவர் மிகவும் தரித்திரராயிருந்தார். அவருக்கு தம்முடைய தலையைச் சாய்க்க ஒரு இடமும் இல்லாதிருந்தது. அவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்ற ஒரு முறை கேடான பெயரை தனக்கு பின்னே கொண்டவராக அவர் ஒரு முன்னணையில் பிறந்தார். அவர் பூமியிலே நகைக்கப்பட்டார், வேடிக்கையாக்கப்பட்டார், பரியாசம் பண்ணப்பட்டார். அவர் வேடிக்கையாக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டார். அவர் மரித்த போது அவர் இரண்டு கள்வர்களுக்கு மத்தியிலே தலையாய தண்டனையான சிலுவை மரணத்தினூடாகவே மரிக்க வேண்டியதாயிருந்தது. அவரை அடக்கம் பண்ண ஓர் இடம்கூட இல்லாதிருந்தது. அவர் மற்றொரு மனிதனுடைய கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார். அதே பரலோகத்தின் தேவன்தாமே பூமிக்கு வருகிறாரே! நாம் ஒரு சிறு துன்பத்தினூடாக செல்ல வேண்டும் எனும்போது நாம் யார் என்றும், நாம் யாருக்காக அவ்வாறு செய்கிறோம் என்றும் எண்ணிப்பார்க்கிறோமா? அவர் நமக்காக எத்தகையக் காரியத்தை செய்தவிட்டாரே! நண்பனே, அதைக் குறித்து எண்ணிப் பார்த்து, அதைக் குறித்து ஆராய்ந்துபார். 71 ரோம போர்ச்சேவகனோ, “மெய்யாகவே அது தேவ குமாரன்தான்” என்றான். பாவியும் அதனை அடையாளங்கண்டுகொள்ள வேண்டியதாயிருந்தது. யூதாஸ், “நான் குற்றமில்லாத இரத்தத்தை காட்டிக் கொடுத்து விட்டேனே” என்றான். அவன் அதை அடையாளங்கண்டு கொள்ள வேண்டியதாயிருந்தது. முழு பூமியும் அதை அடையாளங்கண்டு கொண்டது. 72 அதன் பின்னர் அவர் எங்கே சென்றார்? ஒரு மனிதன் மரிக்கிறபோது, அது இதனை முடித்து விடுகிறதா? இல்லை ஐயா. அவர் அந்தவிதமாக மரிக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அவர் அந்தவிதமாக மரிப்பார் என்று தேவனுடைய வேதம் கூறியிருந்தது. அவர் தேவனுடைய வார்த்தையை நம்பியிருந்தார். அந்தக் காரணத்தினால் அவரால் தன்னுடைய ஜீவியத்தில், “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்று கூறமுடிந்தது. 73 ஏனென்றால் தாவீது ஆவியின் ஏவுதலின் கீழ் வேதாகமத்தில் ஓர் இடத்தில் மட்டுமே கூறினான். வார்த்தையினால் அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியாகிய தேவனுடைய மனுஷன் தாவீது கூறும்போது, “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழைவைக் காணவொட்டீர்” என்றான். 74 இயேசு, “இந்தச் சரீரத்தை அழித்துப் போடுங்கள், மூன்று நாட்களுக்குள்ளே நான் இதை எழுப்புவேன்” என்றார். தேவனுடைய வார்த்தைத் தவறிப்போக முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஓ, என்னே! 75 அவரால் அதின்பேரில் பயபக்தியாய் சார்ந்திருக்க முடிந்ததென்றால், தேவனுடைய வார்த்தை தவறிப்போக முடியாது என்று விசுவாசிக்க முடிந்ததென்றால், நாம் பரிசுத்த ஆவியினால் மறும்படியும் பிறந்திருக்கிறோம் என்றும், அது நம்முடைய இருதயத்தில் நம்முடைய மீட்பர் ஜீவிக்கிறார் என்பதை இப்பொழுதே நாம் அறிந்துள்ளோம் என்பதற்கு ஒரு சாட்சியாயுள்ளதென்றும், என்றோ ஒரு நாளில் அவர் மீண்டும் வருவார் என்பதின் பேரிலும் நாம் எவ்வளவு அதிக பயபக்தியோடு சார்ந்திருக்க முடியும். கிறிஸ்துவுக்குள்ளிருப்பவர்களைத் தேவன் அவரோடே கொண்டு வருவார் என்று நிச்சயமாக நம்பியிருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். 76 அங்குதான் அவர் இருந்தார். அந்த சரீரத்தின் ஒரு உயிரணுவும் அழிந்துபோகக்கூடாது என்பதை அவர் அறிந்திருந்தார். எழுபத்திரண்டு மணி நேரத்தில் அதற்கு அழிவு உண்டாகின்றது. அந்தக் காரணத்தினால்தான் அவர் ஒருபோதும் மூன்று நாட்கள் தரித்திருக்கவே இல்லை. அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் மரித்து, ஞாயிற்றுக்கிழமை காலையில் உயிர்த்தெழுந்தார். ஆனால் அது மூன்று நாட்களுக்குள் சம்பவித்தவையாயிருந்தது. அந்த மூன்று நாட்களுக்குள் அவர் மீண்டும் உயிரோடு எழவேண்டியதாயிருந்தது; ஏனென்றால் அவர் தேவனுடைய வார்த்தையை நம்பியிருந்தார். 77 இதோ அவர் செல்கிறாரே! அவர் ஜீவனை விட்டபோது, அவர் எங்கே சென்றார்? வேதம், “அவர் ஏறினார், அவர் நோவாவின் காலத்தில் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, மனந்திரும்பாமற்போன காவலில் உள்ள ஆத்துமாக்களுக்குப் போய் பிரசங்கித்தார்” என்று கூறியுள்ளது. அவருடைய ஆத்துமா, அவருடைய ஆவி, அவருடைய சொந்த ஆவிக்குரிய சரீரம் கீழே சென்றது. நாம் அவரைப் பின்தொடருவோமாக. இன்றிரவு ஒரு சில நிமிடங்கள் நீங்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்ல விரும்புவீர்களா? அவர் எங்கே சென்றார் என்பதை நாம் காண்போமாக. 78 மானிட வர்க்கங்கள் வாழும் பகுதிக்கு கீழே பிசாசின் அதிகார எல்லை உள்ளது. அதற்குக் கீழே…இதற்குச் சற்று மேலே அநீதியுள்ள ஆத்துமாக்கள் இருக்கின்றன. இதற்குக் கீழேதான் சாத்தானின் இராஜ்ஜியம், பாதாளம் உள்ளது. பரிசுத்த ஆவியானவரோ நமக்கு மேலே இருக்கிறார். அதற்குக் கீழே உள்ள பலிபீடத்தில் நீதிமான்களின் ஆத்துமாக்கள் உள்ளன. அதன்பின்னர் தேவன்தாமே எல்லாவற்றிற்கும் மேலே இருக்கிறார். ஒன்று கீழ்நோக்கிச் செல்கிறது. ஒன்று மேல் நோக்கிச் செல்கிறது. பூமியின் மேல் உள்ள இரண்டு ஆவிகளே இந்தப் பூமியில் உள்ள ஜனங்களை இயங்குகின்றன. 79 இயேசுவானவர் மரித்தபோது, அவர் அங்கே கீழே உள்ள பிசாசின் மண்டலத்திற்கு மேலே செல்கிறார். வெள்ளிக் கிழமைப் பிற்பகல் அவருடைய மரணத்திற்குப் பிறகு அவர் [சகோதரன் பிரான்ஹாம் தட்டுகிறார்—ஆசி] இழக்கப்பட்டோரின் ஸ்தலத்தின் வாசலைத் தட்டுவதை என்னால் காண முடிகிறது. நாம் அவரை ஒரு நிமிடம் பின்தொடருவோமாக. வாசல் திறக்கிறது. அங்கே ஸ்திரீகள் இருந்தனர். அங்கே புருஷர்கள் இருந்தனர். அங்கே வாலிப ஸ்திரீகள் இருந்தனர். அங்கே வயோதிகர்களும் இருந்தனர். அவர்கள் எல்லோருமே இழக்கப்பட்ட ஆத்துமாக்களின் சிறையிருப்பு என்றழைக்கப்பட்ட அந்தப் பயங்கரமான இடத்தில் இருந்தனர். 80 எனக்கு நேரமிருந்திருந்தால் நான் அதை உங்களுக்கு கூறியிருப்பேன். அது ஒரு தரிசனமாயிருக்கலாம். ஆனால் ஒரு சமயம் நான் பாவியாயிருந்தபோது, எனக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது, அந்த ஸ்தலத்திற்கு சென்றேன். அப்பொழுது நான் இரக்கத்திற்காகக் கூக்குரலிட்டேன். நான் தரிசனத்திலிருந்து தெளிந்தபோது, நான் மேற்கு திசையில் என் கைகளை வானத்தை நோக்கியவாறு மேலே உயர்த்திக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு சிலுவையின் ஒளி என் மேல் பிரகாசித்தது. 81 ஆனால் அங்கே அந்தத் துக்ககரமான ஸ்தலத்தில் உள்ள வாசலண்டை இயேசுவானவர் நடந்து சென்றார். அவர் தேவ குமாரனாயிருந்தார் என்று ஒவ்வொரு காரியமும் சாட்சி பகரவேண்டியதாயிருந்தது. ஏனென்றால் நோவாவின் நீடிய பொறுமையான நாட்களில் அவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்டிருந்தது. வாசலைத் தட்டுகிறார், அவர், “ஏனோக்கு ஒருவரைக் குறித்துப் பேசினானே, அவர்தான் நான். நான் சர்ப்பத்தின் தலையை நசுக்க வேண்டியதாயிருந்த ஸ்திரீயின் வித்தாயிருக்கிறேன். ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அப்பால் உள்ள கல்வாரியில் மரித்தேன். நான் என்னுடைய சபையை கிரயத்திற்குக் கொண்டேன். ஏனோக்கு ஒருவரைக் குறித்து பேசினானே, நான்தான் அவர்” என்றார். அவர்கள் இரக்கமின்றி, நம்பிக்கையின்றி இருந்தனர். ஏனென்றால் அவர்கள் மீறி நடந்திருந்தனர். அவர்களுடைய முகத்திற்கு முன்னரே வாசலானது அடைக்கப்பட்டது. 82 அதற்கு கீழ்ப்பகுதியோ பிசாசுகளின் மண்டலமாயிற்றே! அதற்கும் கீழே பாதாளத்தின் வாசல்களாயிற்றே! அவர் வாசலைத் தட்டுகிறார். [சகோதரன் பிரான்ஹாம் தட்டுகிறார்—ஆசி.] 83 அவர் கல்லறையில் இருந்தபோது, அவருடைய சரீரம் உயிர்த்தெழுதலுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. அப்பொழுது அவர் நீதியுள்ளோரும், அநீதியுள்ளோரும் செல்கிற ஸ்தலங்களுக்கு விஜயம் செய்தார். இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் ஒன்று இந்த ஸ்தலத்திற்கு அல்லது மற்றொரு ஸ்தலத்திற்கு செல்வீர்கள். 84 அவர் பாதாளத்தின் வாசலைத் தட்டுகிறார். [சகோதரன் பிரான்ஹாம் தட்டுகிறார்—ஆசி.] அவர் தட்டின போது பிசாசே வந்தான். அப்பொழுது அவன், “ஓ, முடிவாக நீ இங்கேயே வந்துவிட்டாயே. நான் ஆபேலைக் கொன்றபோதே, நான் உன்னைக் கொன்றுவிட்டேன் என்று நிச்சயமாகவே எண்ணியிருந்தேன்” என்று அவன் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 85 நீங்கள் பாருங்கள், அந்த வித்து ஏதேன் தோட்டத்தில் வாக்களிக்கப்பட்டபோது, பிசாசு அந்த வித்தை அழிக்கத் தொடர்ந்து முயன்று வந்தான். ஆபேலின் மரணமும், சேத்தின் வருகையும், கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலாயிருந்தது. அந்த வித்து தொடர்ந்து வரவேண்டும். அவனோ அதை அழிக்க முயற்சித்தான். 86 அவன், “நான் ஆபேலைக் கொன்றபோது, உன்னை அழித்து விட்டேன் என்றே எண்ணியிருந்தேன். நான் தீர்க்க்கதரிசிகளைக் கொன்றபோதே, உன்னை அழித்துவிட்டேன் என்றே எண்ணிக் கொண்டேன். நான் யோவானைச் சிரச்சேதம் பண்ணினபோதே, உன்னை அழித்துவிட்டேன் என்ற நிச்சயத்தோடு இருந்தேன். ஆனால் இப்பொழுதோ எல்லாவற்றிற்கும் பிறகே நீ வந்துள்ளாய். நான் இப்பொழுதோ உன்னை வென்று விட்டேன்” என்றான். ஓ, என்னே! 87 அவர், “சாத்தானே, இங்கே வா” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அவர் இப்பொழுது எஜமானாயிருக்கிறார். சாத்தானின் பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த மரணத்திற்கும், பாதாளத்திற்கும் உரிய அந்தத் திறவுகோலை அவர் தம்முடைய கரம் நீட்டி பற்றிப் பிடிப்பதை என்னால் காணமுடிகிறது. மேலும் அவர், “நான் உனக்கு முன்னறிவிப்பைத் தெரிவிக்க விரும்புகிறேன். நீ இவ்வளவு காலம் முழுமையாக பொய்யுரைத்து ஏமாற்றி வந்தாய், நான் ஜீவனுள்ள தேவனுடைய கன்னிப்பிறப்பின் குமாரனாயிருக்கிறேன். என்னுடைய இரத்தம் இன்னமும் சிலுவையில் ஈரக்கசிவோடு உள்ளது. முழு கடனும் செலுத்தப்பட்டாயிற்றே! உனக்கு இனிமேல் எவ்வித உரிமையுமே கிடையாது. நீ துகிலுரியப்பட்டிருக்கிறாய். அந்தத் திறவுகோல்களை என்னிடம் கொடு” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. அது உண்மை. மேலும் அப்படியே சுற்றித்திரும்பி தன்னுடைய காலினால் ஒரு நல்ல வலுவான உதையை அவனுக்கு கொடுத்து, கதவை வேகமாக இழுத்து அடித்து மூடிவிட்டு, “அங்கேயே தரித்துக்கிட”, இது முதற் கொண்டு நான்தான் எஜமான் என்று கூறுவதையும் என்னால் கேட்க முடிகிறது. 88 இப்பொழுது, அவர் இராஜ்ஜியத்திற்கான திறவுகோல்களை உடையவராயிருக்கவில்லை. ஏனென்றால் அவர் அவைகளை பேதுருவினிடத்தில் கொடுத்துவிட்டார். நாம் எல்லோரும் அதைக் காலையில் தண்ணீர் ஞானஸ்நானத்தில் புரிந்து கொண்டோம். ஆனால் அவர் மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருந்தார். அவர் அவைகளை எடுத்துக்கொண்டார்; அவர் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர், “நான் மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” என்றார். பேதுருவோ பரலோக இராஜ்ஜியத்தின் திறவுகோல்களை உடையவனாயிருந்தான். சாத்தான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவனாயிருந்தான்; ஆனால் இப்பொழுதோ இயேசு அவைகளைப் பெற்றுக் கொண்டு, அவரே எஜமானாயிருக்கிறார். 89 இதோ அவர் அங்கிருந்து புறப்படத் துவங்குகிறார். இது ஈஸ்டர் தினமாயுள்ளது. நேரமோ துரிதமாகக் கடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு மற்றொரு குழு இருக்கிறது. யோபு எங்கேயிருக்கிறான்? ஆபிரகாம் எங்கே இருக்கிறான்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? தேவனுடைய வார்த்தையை நம்பியிருந்த அந்த நபர்கள் எங்கேயிருக்கின்றனர்? அவர் அவர்களை மறந்து விட்டாரா? மரணம் அவர்களை அடியோடு அழித்துப்போட்டு விட்டதா? அதைக் குறித்தெல்லாம் அவ்வளவுதானா? இல்லையே, இல்லவே இல்லை. தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்ள வேண்டியவராயிருக்கிறார். 90 என்னால் அவரைக் காணமுடிகிறது. நாம் பரதீசுக்குள்ளாக ஒரு சிறு கண்ணோட்டமிடும்படியாக அங்கு நோக்கிப் பார்ப்போமாக. சாராளும், ஆபிரகாமும் சுற்றி நடந்து வருவதை நான் காண்கிறேன். கொஞ்சங்கழித்து [சகோதரன் பிரான்ஹாம் தட்டுகிறார்—ஆசி.] யாரோ ஒருவர் வாசலண்டை நிற்கிறார். அப்பொழுது ஆபிரகாம் சென்று கதவைத் திறந்து, “தேனே, இங்கே வா. இங்கே பார். அந்த நாளில் சிந்தூர மரத்தின் கீழே என்னோடு நின்ற அந்த ஒருவர் இவர்தான்” என்றான். அவர் ஆபிரகாமினுடைய தேவனாயிருந்தார். 91 அதன் பின்னர் தானியேல் அவருடைய தோளைப் பார்த்து, “நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாய், கைகளால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து உருண்டு வந்த அந்தக் கல்தான் அது” என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. 92 யோபு எழும்பி, “என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், என்றோ ஒருநாள் அவர் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிவேன் என்று நான் கூறின என்னுடைய மீட்பர் அவரே. என்னுடைய சரீரம் ஒன்றுமேயில்லாமல் ஒரு சிறு கரண்டியளவு கொண்ட சாம்பலாயிருக்கலாம். ஆனால் இப்பொழுதிலிருந்து இன்னும் பதினைந்து நிமிடத்திற்குள்ளாக, நான் என் சரீரத்தை மீண்டும் பெற்று அதில் இருப்பேன். அது அவரேதான்” என்று கூறுவதை நான் காண்கிறேன். 93 எசேக்கியல் அங்கு மேல் நோக்கிப் பார்த்து, “நான் இதே நபரைத்தான் பூமியிலிருந்து ஆகாயத்திற்கு எழும்பின சக்கரத்தின் நடுவில் உள்ள சக்கரத்தில் கண்டேன்” என்றான். ஓ, என்னே! 94 அதன் பின்னர் ஏனோக்கு வருகிறான். ஏனோக்கு, “நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடு அவர் வருகிறதை நான் கண்டேன்” என்றான். 95 அங்கே பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் காத்துக் கொண்டிருந்தனர். நிச்சயமாகவே அவர்கள் பாவநிவிர்த்தியின் இரத்தத்தின் கீழ் இருந்தனர். அவர்களால் தேவனுடைய சமூகத்திற்குள், பரலோகத்தின் தேவனண்டைச் செல்ல முடியவில்லை. ஏனென்றால் வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டின் இரத்தமானது பாவத்தைப் போக்க முடியாதிருந்தது. 96 ஆனால் அவர், “என் சகோதரர்களே, நீங்கள் நினைக்கிற அந்த ஒருவர் நான்தான். நான் ஸ்திரீயின் வித்தாயிருக்கிறேன். நான் தாவீதின் குமாரனாயிருக்கிறேன். நான் தேவ குமாரனாயிருக்கிறேன். நான்தான் அந்தக் கன்னிப் பிறப்பான ஒருவர். என்னுடைய இரத்தம் அதற்காக பாவநிவிர்த்தி செய்துள்ளது. நீங்கள் செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டின் இரத்தத்தின் கீழ் காத்திருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ என்னுடைய இரத்தம் பாவநிவிர்த்தி செய்கிறது. எனவே நீங்கள் விடுதலையாகியிருக்கிறீர்கள். நாம் மேலே எழும்பிச் செல்வோமாக. ஏறக்குறைய உயிர்த்தெழுதல் நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்றார். இன்றிரவு ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சம்பவித்ததைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். 97 ஆபிரகாம், “ஆண்டவரே, நாங்கள் மீண்டும் எங்களுடைய சரீரத்தில் எழும்பி வருவதை சாராளும் நானும் அவ்வளவாய் விரும்பினோம். நாங்கள் உம்முடைய பாதையில் செல்லும்போது, சில இடத்தில் நாங்கள் சற்று நின்று பார்ப்போமேயானால், நீர் அதை விரும்புவீரா?” என்று கேட்பதை என்னால் கேட்க முடிகிறது. 98 அதற்கு அவரோ, “ஏன் விரும்பமாட்டேன், நிச்சயமாக விரும்பாமலிருப்பேனா? நான் என்னுடைய சீஷர்களோடு ஏறக்குறைய நாற்பது நாட்கள் தரித்திருக்கப் போகிறேன். எனவே சுற்றும் முற்றும் பாருங்கள். ஒவ்வொருக் காரியமும் எப்படிக் காணப்படுகிறது என்று பாருங்களேன்!” என்று கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. 99 அந்த மகிமையான உயிர்த்தெழுந்த ஈஸ்டர் காலையில் (கர்த்தருக்கு சித்தமானால் நாம் யாவரும் அந்தக் காலையில் எடுத்துக் கொள்ளப்படுவோம்.) அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபோது, பரிசுத்த மத்தேயும் 27ம் அதிகாரத்தின்படி, “பூமியின் தூளிலே நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்கள் எழும்பி கல்லறைகளை விட்டு வெளியே வந்தனர்” என்று வேதம் கூறியுள்ளது. அது யாராயிருந்தது? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோபு, என்றோ ஒரு நாள் மீட்பர் பூமியின்மேல் நிற்பார் என்று ஆவிக்குரிய பிரகாரமாய் வெளிப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டின் மூலமாய் அவர்கள் அதை அறிந்திருந்தனர். அது அவர்களாய், அந்த நித்திரையடைந்தவர்களின் முதற்பலனாயிருந்தது. அவர்கள் அங்கே நகரத்திற்குள் நடந்து சென்றனர். சாராளும், ஆபிரகாமும் முழு…வாலிபமாக, அழகாக, முழுமையான ஜீவனைக் கொண்டவர்களாக, இனி ஒருபோதும் வயோதிபமடையாதவர்களாக, இனி ஒருபோதும் சுகவீனமடையாதவர்களாய், இனி ஒருபோதும் பசியடையாதவர்களாய் தங்களுடைய சரீரங்களில் சுற்றி நடந்து வருவதை என்னால் காணமுடிகிறது. 100 காய்பாவோ அங்கு நின்றுகொண்டு, “என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? அன்றொரு நாள் அங்கே ஏதோ ஒரு காரியம் சம்பவித்ததாயிருந்தது. இந்தத் தேவாலயத்திற்குள்ளே காணப்படுகிற இந்த அலங்கோலத்தை சற்று பாருங்களேன்! அங்கே உள்ள…நாம் யாராவது ஒருவரைக் கொண்டுவந்து அந்த தேவாலய திரைச்சீலையை தைக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். அந்தப் பலிபீடம் நிலைமாறி கவிழ்க்கப்பட்டதைப் பாருங்கள். என்ன சம்பவித்தது? அந்த ஆள் ஜோதிடராயிருந்தாரா? அவர் ஒரு சூனியக்காரராயிருந்தாரா? இல்லையென்றால் என்ன சம்பவித்தது? ஜோசிபஸ் இங்கே, வா, அங்கே நின்றுக் கொண்டிருக்கிற அந்த வாலிபத் தம்பதியினர் யார்? என்று சொல்லுங்களேன்!” என்கிறான். ஆபிரகாமோ, “சாராளே, நாம் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டுவிட்டோம். எனவே நாம் இங்கிருந்து வெளியேறுவதே மேலானது” என்று கூறினான். 101 “அநேகருக்கு காணப்பட்டனரே!” அவர்கள் யாவருக்கும் காணப்படவில்லை. முடிவிலே கவனியுங்கள். அவர் உயிர்த்தெழுந்த பிறகு ஒரு நாள், அவர்கள் விஜயம் செய்தனர். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு அவர்கள் யாவரும் அந்தத் தாய்நாட்டிற்கு விஜயம், செய்தனர். இயேசுவானவர் உன்னதத்திற்கு ஏறிப்போகையில்… 102 நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், அது கற்பனையா?” என்று கேட்கலாம். இல்லை ஐயா! நான் இன்னும் ஒரு நிமிடத்தில் அதற்கான வேத வாக்கியங்களை உங்களுக்கு காண்பிக்கவுள்ளேன். 103 அவர் மேலேறிச் செல்லத் துவங்கும்போது, அவர்கள் அவரை மாத்திரமே கண்டனர். ஆனால் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அவரோடு சென்றனர். ஏனென்றால் வேதமோ, “அவர் சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்” என்று கூறியுள்ளது. அவர் மேலேறிச் செல்கையில், அவர் தம்முடைய சபையோடு இணைகிறதை என்னால் காணமுடிகிறது. 104 இசையை இசைத்துக் கொண்டிருந்த அந்தக் குழுவிலிருந்து இரண்டு தூதர்கள் அங்குத் திரும்பிவந்து, “கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? ஏனென்றால் எடுத்துக் கொள்ளப்பட்ட இதே இயேசுவானவர் மறுபடியும் வருவார்” என்று கூறினர். நிச்சயமாகவே! பின்னர் அவர்கள் மீண்டும் அந்த ஊர்வலத்தில் இணைந்து கொள்ள அவசரமாகச் சென்றுவிட்டனர். 105 ஆகாய மண்டலத்தினூடாக இயேசுவும், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களும் சென்றனர். அவர்கள் சந்திரனைக் கடந்து சென்றனர். அவர்கள் சூரியனைக் கடந்து சென்றனர். அவர்கள் நட்சத்திரங்களைக் கடந்து சென்றனர். அவர்கள் அந்த மகத்தான காட்சிக்குள், அழகான வெண்மையான ஆகாய மண்டலங்களுக்குள் பிரவேசித்தபோது, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோ, “அநாதி கதவுகளே, உயருங்கள்; உயர்த்துங்கள்; அநாதிக் கதவுகளே உயருங்கள்; உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்” என்ற இந்த வேத வாக்கியத்தை மேற்கோளிட்டு கூச்சலிட்டனர். 106 அப்பொழுது பரலோகத்தின் படிக்கட்டுகளின் கைப்பிடி கம்பிகளண்டை எல்லாத் துதர்களும் ஒன்றுகூடி, “யார் இந்த மகிமையின் இராஜா?” என்று கேட்டனர். 107 அதற்கு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களோ, “அவர் சேனைகளின் கர்த்தரானவர், யுத்தத்தில் பராக்கிரமமுள்ளவராமே! ஒரு ஜெயவீரராயிற்றே!” என்றே பதில் உரைத்தனர். 108 அப்பொழுது தேவதூதன் அந்தப் பெரிய பொத்தானை அழுத்த, முத்துகளினாலான வாசல்களோ சுழன்று திறந்தன. 109 அப்பொழுது அந்த மகா பெரிய பராக்கிரமமுள்ளவரான ஜெயவீரர் நேராக எருசலேம் நகரத்தினூடாக பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களைக் கொண்டு வருகிறார். தூதர்களின் கூட்டம் இசை இசைத்துக் கொண்டும், ஆரவாரமிட்டுக் கொண்டுமிருக்கின்றனர். அவர் பராக்கிரமமுள்ள ஜெய வீரராயிருந்தாரே! அவருடைய பக்கவாட்டில் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்கள் தொங்கிக் கொண்டிருக்க, அவர் சிங்காசனத்தண்டைக்குத் தாம் விட்டுவந்த மகிமையின் ஸ்தலங்களுக்கு நேராகச் சென்றார். அப்பொழுது அவர், “பிதாவே, இதோ இவர்கள் இருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் நான் வருவேன் என்ற உம்முடைய வார்த்தையின் பேரிலான விசுவாசத்தில் அவர்கள் விசுவாசம் கொண்டிருந்தனர். நான் மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தேன்” என்று கூறினார். சகோதரனே, அது என்னவாயிருந்தது? அவர் யுத்தத்தில் இருந்து வந்தார் என்று காண்பிக்கும்படியாக அவர் தம்முடைய கையில் தழும்புகளை உடையவராயிருந்தார். உன்னதத்திலுள்ள தேவனுக்கே மகிமை! அவரே அந்தப் பராக்கிரமமுள்ள ஜெய வீரராயிருக்கிறாரே! அவர், “பிதாவே, இதோ அவர்கள் இருக்கிறார்கள். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு” என்றார். 110 அப்பொழுது அவரோ, “குமாரனே, நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும்” என்று கூறுவதை என்னால் கேட்கமுடிகிறது. சகோதரனே, என்றோ ஒரு நாள் அவர் மீண்டும் வருவார், அப்பொழுது அது என்னே ஒரு நாளாயிருக்கும்! 111 அவர் கல்லறையில் இருந்தபோது, அவர் வீணாயிருக்கவில்லை. அவர் அங்கே வெறுமனே மரித்தவராய் படுத்துக் கொண்டிருந்தார் என்றே நாம் நினைக்கிறோம். ஆனால் அவரோ இன்னும் தாழ இறங்கி ஜெயங்கொண்டு, அவர் தாழ இறங்கி சாத்தானிடமிருந்து திறவுகோல்களை கைப்பற்றினார். அவர் இன்றிரவு மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையராயிருக்கிறார். எனவே அவர், “நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்” என்றார். 112 என்னுடைய அருமையான சகோதரனே, சகோதரியே, இன்றிரவு உண்மையாகவே அதைக் குறித்து சிந்தித்து பார்த்துள்ளாயா என்றே நான் ஆச்சரியப்படுகிறேன். அவர் பிழைக்கிறபடியால் மாத்திரமே நீங்கள் பிழைக்கிறீர்கள் என்று நீங்கள் தெளிவாக உணருகிறீர்களா? நீங்கள், “தேவனே, இதோ நான் ஒரு பாவியாயிருக்கிறேன். என்னிடத்தில் இரக்கமாயிரும்” என்று கூறி, உன்னையே ஏறெடுத்துப் படைக்குமளவிற்கு அதை போதுமான அளவு மனதார உணர்ந்துள்ளீர்களா? நீங்கள் எப்போதாவது அந்த எல்லாவற்றிற்கும் போதுமான பலியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் அவரை நேசித்தீர்கள் என்று எப்போதாவது நீங்கள் அவரிடத்தில் கூறியிருக்கிறீர்களா? நீங்கள் தவறு செய்யும்போது அது உங்களுடைய உணர்வுகளை புண்படுத்துகிறதா? இப்பொழுது நீங்கள் அந்த அனுபவத்திற்குள் ஒருபோதும், வராமலிருந்தால், இந்தக் கல்லறையிலிடுதலின் போதாவது வருவீர்களா? நம்முடைய நேரமோ கடந்து கொண்டேயிருக்கிறது. அப்படியே அருமையான உணர்வாயுள்ளதே! ஆனால் நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதோ, நீங்கள் கிறிஸ்துவை உங்களுடைய சொந்த இரட்சகராக எப்போதுமே ஏற்றுக்கொள்ளாமலிருந்தால், நாம் ஜெபத்திற்கு சற்று நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துகையில், நீங்கள் அவரை ஏற்றுக்கொள்வீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். 113 சகோதரி கெர்ட்டி (Gertie) அவர்களே உங்களுக்கு விருப்பமானால், பிளவுண்ட கற்பாறைகளுக்கு மத்தியில் என்ற அந்தப் பாடலை நீங்கள் வைத்திருந்தால், அதை வாசியுங்கள். சரி, வேறு எந்தப் பாடலாயிருந்தாலும் வாசியுங்கள். 114 உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நான் உங்களை ஒரு உண்மையான கேள்வி கேட்கப் போகிறேன். நண்பர்களே, நினைவிலிருக்கட்டும், பாவியானாலும் அல்லது பரிசுத்தவானாயிருந்தாலும் நாங்கள் உங்களை அடக்கம் பண்ணும்போது, நீங்கள் ஜீவிக்காமலிருக்கப் போவதில்லை. உங்களுடைய ஆத்துமா எங்கோ உள்ளது. இப்பொழுது, இயேசுவானவர் வேத வாக்கியங்களின்படி இரண்டு ஸ்தலங்களையுமே விஜயம் செய்தார். இன்றிரவு நீ மரித்துப்போவாயானால் அவர் உன்னை எங்கே கண்டறிவார்? நீ புறக்கணித்திருக்கிறபடியால், உனக்கு முன்னால் அடைக்கப்பட்ட இரக்கத்தின் வாசலை நீ உடையவனாயிருப்பாயா? அவர் ஒரு இரட்சகராய் மாத்திரமல்லாமல், அவர் ஒரு நியாயாதிபதியாயும் இருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும். நீங்கள் இப்பொழுது நியாயாதிபதியாயிருக்கிறீர்கள். நீங்கள் எப்படி அவரை நியாயந்தீர்க்கிறீர்கள்? அவர் இப்பொழுது உங்களுடைய இரட்சகராயிருக்கட்டும். 115 ஒரு சிறு கதை என்னுடைய நினைவிற்கு வருகிறது. கொஞ்ச காலத்திற்குள் முன்னர் ஒரு சிறு பையன் ஒரு—ஒரு குதிரை வண்டிக்குள் அமர்ந்து கொண்டிருந்தான். அப்பொழுது வீதியில் ஒரு துப்பாக்கிச்சூடு நடந்தபடியால், குதிரைகள் தப்பிப் பிழைக்கும்படிக்கு ஒரு மலைப்பாங்கில் உள்ள செங்குத்தான பாறையின் மீது ஓடிக் கொண்டிருந்தன. அப்பொழுது ஒரு வாலிப மாடு மேய்க்கும் பையன் அந்த குதிரைகள் ஓடி மலையில் உள்ள ஒரு செங்குத்தான பாறையின் முனையிலிருந்து கீழே விழுவதற்கு முன் அந்த வண்டியைப் பற்றிப்பிடித்து நிறுத்தி விட்டான். ஏனென்றால் அந்த வண்டிக்குள் ஒரு குழந்தை இருந்தது. எனவே அவன் அந்தச் சிறு குழந்தையினுடைய ஜீவனைக் காப்பாற்றிவிட்டான். 116 அதன் பின்னர் அநேக வருடங்கள் கழித்து அந்தச் சிறு குழந்தையாயிருந்தவன் நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்தான். இந்தச் சிறுகுழந்தையாயிருந்த பையன் தவறான பாதையை தெரிந்துகொண்டு, குற்றமுள்ளவனாகி சட்டத்திற்கு விரோதமான ஒரு குற்றத்தையும் புரிந்துவிட்டிருந்தான். அவன் குடித்துக் கொண்டும், சூதாடிக்கொண்டும் இருந்தபோது ஒரு மனிதனைச் சுட்டுவிட்டான். எனவே அவன் குற்றவாளியானபடியால், குற்றவாளியாய் பிடிக்கப்பட்டான். அப்பொழுது நீதிபதி எழும்பி நின்று, “நீ மரிக்கும்மட்டாய் உன்னை தூக்கிலிம்படிக்கு நான் உனக்கு தீர்ப்பளிக்கிறேன்” என்று கூறிவிட்டார். 117 அந்த வாலிப மனிதனோ, “நீதிபதி அவர்களே” என்றான். மேலும் அவன் நீதிமன்ற விதிமுறையை மீறி, அவன் அந்தக் குற்றவாளிக் கூண்டிலிருந்து குதித்து இரக்கத்திற்காக நீதிபதியினுடைய பாதத்தண்டை விழுந்தான். அப்பொழுது அவன், “நீதிபதி அவர்களே, என்னுடைய முகத்தை நோக்கிப் பாருங்கள். என்னை உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவரோ, “இல்லை மகனே, எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார். 118 அப்பொழுது அவன், “அநேக ஆண்டுகளுக்கு முன்னர் விபத்திற்குள்ளாகும்படி ஓடின ஒரு குதிரை வண்டியிலிருந்து ஒரு குறிப்பிட்ட சிறு பையனுடைய ஜீவனை நீங்கள் காப்பாற்றினது உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டான். அதற்கு அவர், “ஆம், அது எனக்கு நினைவிருக்கிறது” என்று கூறினார். 119 அப்பொழுது அவன், “நான்தான் அந்தப் பையன்” என்றான். மேலும் அவன் “நீதிபதி அவர்களே, அப்பொழுது நீங்கள் என்னைக் காப்பாற்றினீர்கள், எனவே இப்பொழுதும் என்னைக் காப்பாற்றுங்களே!” என்று கூறினான். 120 அதற்கு நீதிபதியோ அவனை நோக்கிப் பார்த்து, “மகனே, அந்நாளில் நான் உன்னுடைய இரட்சகராக இருந்தேன். இந்நாளிலோ நான் உன்னுடைய நியாயாதிபதியாக இருக்கிறேன்” என்று கூறிவிட்டார். 121 இன்றைக்கு அவர் உங்களுடைய இரட்சகராய் இருக்கிறார். பாவியே, நாளை அவர் உன்னுடைய நியாதிபதியாக இருக்கலாம். இசையானது இசைக்கப்படும்போது, இப்பொழுதே நாம் அதைக்குறித்து சிந்தித்துப் பார்ப்போமாக. ஒவ்வொருவரும் ஜெபியுங்கள். அதை ஆதாரமாகக் கொண்டே தேவனிடத்தில் ஜெபித்துக் கொண்டிருங்கள். 122 இப்பொழுது இன்றிரவு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் துரிதமாக, “தேவனே ஒரு பாவியான என்னிடத்தில் இரக்கமாயிரும். நான் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலமாக வர விரும்புகிறேன். நான் சபையில் சேர்ந்து கொள்ளவும், இடம் விட்டு இடம் ஓடவும் முயன்று வந்தேன். நான் மறுபடியும் பிறக்க விரும்புகிறேன். சகோதரன் பிரான்ஹாம், சற்றுமுன் நீர் பேசினதைக் குறித்து ஆவிக்குரிய வெளிப்பாட்டினால் கிறிஸ்து தம்மை எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை என் இருதயத்தில் நான் அறிந்து கொள்ளும் அனுபவம் எனக்குத் தேவை. எனக்கு ஆவிக்குரிய வெளிப்பாடு தேவை. என் இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் வந்து, என்னை உயிர்ப்பித்து, எனக்கு நானே விளங்கிக்கொள்வதைக் காட்டிலும் அதிகமாக கிறிஸ்துவை எனக்குத் தத்ரூபமாக விளக்கிக் காண்பிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சகோதரன் பிரான்ஹாம், நான் அந்த அனுபவத்தையே வாஞ்சிக்கிறேன். நான் என்னுடைய கரத்தை உயர்த்தும்போது, நீர் எனக்காக ஜெபிப்பீரா?” என்று கூறுவீர்களா என்று நான் எதிர்பார்க்கிறேன். ஜெபத்தில் நினைவுகூரப்பட வேண்டுமென்று வாஞ்சிக்கிறவர்கள் இப்பொழுதே உங்களுடைய கரங்களை உயர்த்துவீர்களா? பெண்மணியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. பெண்மணியே, அங்கே பின்னால் உள்ள உங்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக. அது நன்றாயுள்ளது. ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நன்றாயுள்ளது. உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள். இப்பொழுது உங்களுடையக் கரம் மேலே உயரட்டும். 123 நீங்கள் எப்படி வெட்கப்படத்தக்கவர்களாயிருப்பீர்கள்? நண்பனே, அதைப்போன்ற அப்பேர்ப்பட்டதை உன்னால் புறக்கணிக்க முடியுமா? நினைவிருக்கட்டும். 124 “ஓ” நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், பிரசங்கிமார்கள் அநேக வருடங்களாக பிரசங்கித்திருக்கிறார்கள்” என்று கூறலாம். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் அவர்கள் பிரசங்கிப்பதை விட்டுவிடப் போகிறார்கள் என்பதை நான் அறிவேன். காரியங்கள் காணப்படுகிற விதத்தில் பார்த்தால், அது சரியாக இருக்கலாம். நீங்கள் உங்களுடைய கடைசி பிரசங்கத்தை கேட்கப் போகிறீர்கள். மனந்திறந்து பேசுகிறேன், இது நீங்கள் கேட்கும் கடைசிப் பிரசங்கமாயிருக்கலாம். 125 “ஓ” நீங்களோ, “நான் வாலிபமாயிருக்கிறேன்” என்று கூறலாம். அது ஒரு பொருட்டல்ல. மரணத்திற்கு முகதாட்சணியமோ அல்லது வயதோ அல்லது சாமார்த்தியமோ கிடையாது. 126 நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவதின் மூலம் “இப்பொழுதே அவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தேவனே, என்னிடத்தில் இரக்கமாயிரும் என்று கூறுவீர்களா?” இங்குள்ள இந்த மற்றவர்களோடு உங்களுடைய கரங்களையும், உயர்த்தி, “இப்பொழுதே நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் உங்களுடையக் கரங்களை உயர்த்துவீர்களா? 127 பின்மாற்றமடைந்த எவரேனுமிருந்தால், “தேவனே, என்னிடத்தில் இரக்கமாயிரும், நாளைய தினமானது எனக்கான ஒரு புதிய உயிர்த்தெழுதலாயிருக்கும்படியாக நான் இன்றிரவே கிறிஸ்துவினிடத்திற்கு திரும்பிவர விரும்புகிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் உங்களுடையக் கரங்களை உயர்த்துவீர்களா? உங்களுடைய கரத்தை மேலே கொண்டு சென்று, “என்னிடத்தில் இரக்கமாயிரும். நான் இப்பொழுதே வர விரும்புகிறேன்” என்று கூறுங்கள். நீங்கள் அதைச் செய்வீர்களா? உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “நான் ஒரு பின்மாற்றமடைந்தவனாயிருந்து வந்துள்ளேன், ஆனால் இன்றிரவோ…” என்று கூறுங்கள். பெண்மனியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நன்றாயுள்ளது. “நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வேன். நான் இன்றிரவே அவரை ஏற்றுக் கொள்வேன். நான் தேவனை விட்டு அநேக வருடங்களாக தூர அலைந்துத் திரிந்து வந்தேன். ஆனால் நான் இப்பொழுதே வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறேன்”. உங்களுடைய பழைய ஜீவியம் முடிவடையும்படியாகவும், இது உங்களுக்கான ஒரு புதிய உயிர்த்தெழுதலாயிருக்கும்படியாக, இன்றிரவே நீங்கள் அவரை ஏற்றுக்கொள்வீர்களா? 128 இந்தப் பெண்மணி தன்னுடைய அறிக்கையிடுதலைச் செய்ய பீடத்தண்டை நிற்கும்படியாக மேலே வந்து கொண்டிருக்கிறாள். வேறு எவரேனும் தங்களுடைய அறிக்கையிடுதலின் பேரில் இங்கு வந்து தங்களுடைய ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ள, அவளோடுகூட இங்கு மேலே வர விரும்புகிறீர்களா? நீங்கள் எழும்பி நின்று மேலே பீடத்தண்டைக்கு வருவீர்களா? பீடம் திறந்தேயுள்ளது. நிச்சயமாகவே. நேராக மேலே வாருங்கள். நீங்கள் இங்கு நின்று ஜெபிக்க விரும்பினால் அது சரியாக இருக்கும். வாருங்கள். நீங்கள் வருவீர்களா? உங்களுடைய விசுவாச அறிக்கையின் பேரில், தேவ குமாரனில் உள்ள உங்களுடைய விசுவாசத்தின் பேரில், நீங்கள் இப்பொழுது வருவீர்களா? சரி. 129 அது உங்களைப் பொறுத்தது. உங்களுக்கு நினைவிருக்கட்டும். நீங்கள் அந்த ஒருவராயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு பாவியாயிருக்கிறீர்களா? நீங்கள் ஒரு பின்மாற்றமடைந்தவராயிருக்கிறீர்களா? நீங்கள் குளிர்ந்துபோய் கிறிஸ்துவை விட்டு தூரமாய் போய்விட்டீர்களா? நீங்கள் இப்பொழுதே அவரோடு புதியதாய் எழுப்பப்பட வேண்டுமென்றும், புதியதாக ஜீவியத்தைத் துவங்க வேண்டுமென்றும் விரும்புகிறீர்களா? அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களோடு நீண்டகாலமாக கணவனும் மனைவியுமாய் இருந்து வந்தும், உங்களுடைய வீட்டில் உண்டாகும் குழப்பங்களைக் கொண்டவர்களாயுள்ள உங்களைக் குறித்து என்ன? நீங்கள் ஒவ்வொருவரும் அந்தக் காரியத்தை இப்பொழுதே தேவனோடு சரிப்படுத்திக் கொள்ள வரமாட்டீர்களா? இந்த ஈஸ்டரானது உண்மையாகவே உங்களுக்கான ஈஸ்டராயும் ஒரு புதிய இல்லத்தை துவங்குகிறதுமாயும் இருப்பதாக. 130 நீங்கள் சபையிலிருந்து வீட்டிற்குச் சென்று, உங்களால் முடிந்தளவு சிறப்பாக ஜீவிக்க முயன்றும், உங்களுடைய குடும்பத்தினரை ஒருபோதும் ஒன்று சேர்த்து ஜெபிக்கும்படி கொண்டு வரமுடியாமலும், உங்களுடைய வீட்டில் ஒருபோதும் ஜெபமே செய்ய இயலாதவர்களாய் இருந்து வருகிற உங்களைக் குறித்து என்ன? அந்தக் காரணத்தினால் நாம் இளைஞர்கள் புரிகின்ற தீயசெயல்களையும், நாம் பெற்றுள்ள இந்தக் காரியங்களை உடையவர்களாயிருக்கிறோம். அந்தக் காரணத்தினால்தான் அமெரிக்க இல்லங்கள் ஒற்றுமை குலைந்தவைகளாக காணப்படுகின்றன. இன்றிரவே புதியதாயத் துவங்க நீங்கள் வரமாட்டீர்களா? நீங்கள் அதைச் செய்வீர்களா? நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நினைவிருக்கட்டும். நான் இப்பொழுது உங்களுடைய ஊழியக்காரனாயிருக்கிறேன். ஆனால் அந்நாளிலோ நான் ஒரு சாட்சியாயிருப்பேன். நாம் இப்பொழுது ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், 131 எங்களுடைய ஸ்தோத்தரிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, நாங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்துள்ளபடியான மிக முக்கியம் வாய்ந்ததான புனிதமான பயபக்திக்குரிய முறையில் இந்தக் கூட்டத்தாரை இன்றிரவு உம்மண்டை கொண்டு வருகிறோம். நாங்கள் தாழ்மையாய் உம்முடைய சிங்காசனத்தை அணுகுகிறோம். இன்றிரவு இந்தச் செய்தியின்படி அந்த மகத்தான கல்லறையிலிடுதலுக்குப் பின்னரும் அவர் ஒருபோதும் அமைதியாய் படுத்திருக்கவில்லை. அவருடைய ஆத்துமாவானது பூமியின் கீழேயுள்ள தாழ்வான மண்டலங்களுக்குள்ளாகச் சென்று தேவனுடையப் பணியை செய்து முடித்தது. அவர் அதை செய்யும்படிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். அடுத்த நாள் காலை, அவர் மேலே உள்ள மண்டலங்களினூடாகச் சென்று தம்முடைய உயிர்த்தெழுதலில் ஒவ்வொருக் காரியத்தையும் ஜெயங்கொள்வதை நாங்கள் கண்டறிகிறோம். ஆனால் அவர் ஈஸ்டர் காலையில் எங்களை நீதிமான்களாக்குவதற்காகவே வெளியே வந்தார். பாவ மனுஷர்களைக் குற்றவாளிகளென்று உள்ளத்தில் உணர்த்தும்படியாகவே பரிசுத்த ஆவியைத் திரும்ப அனுப்பினார் என்று நாங்கள் கண்டறிகிறோம். 132 கர்த்தாவே, உமக்கு முன்பாக நினைவுக்கூரப்பட வேண்டுமென்று தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்களுக்காக இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் உம்மை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும், உம்மை விசுவாசிக்கிறார்கள் என்ற அவர்களுடைய தீர்மானம் இன்றிரவு அவர்களுடைய இருதயத்திலிருந்து உண்டாவதாக. அவர்கள் இன்றிரவு பரிசுத்த ஆவியினால் வாக்குத்தத்தத்தின் முத்திரையினால் முத்திரையிடப்படுவார்களாக. பிதாவே இதை அருளும். நாங்கள் இன்றிரவு இந்தச் செய்தியோடு அவர்களை உம்மண்டை ஒப்புவிக்கிறோம். இதனைக் கேட்டிருக்கிறவர்களுக்கு இது ஆசீர்வாதமாயிருப்பதாக. கர்த்தாவே அவர்கள் இதை தங்களோடு தங்களுடைய இல்லத்திற்கு கொண்டு சென்று, தங்களுடைய இருதயத்தில் ஆழமாய் பதித்துக் கொள்வார்களாக. அவர்கள் தேவனுடைய வார்த்தையின் பேரில் ஜீவிப்பார்களாக. பிதாவே இதை அருளும். ஏனென்றால் நாங்கள் இதை கிறிஸ்துவினுடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.